கடல் சார் ஆய்வு பல்கலை துணைவேந்தர் டிஸ்மிஸ்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் யுஜிசி விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் சமீபத்தில் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து யுஜிசி விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனடியாக பதவி விலக கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரள பல்கலைக்கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த … Read more

சாக்லேட் சாப்பிட்டதும் மயக்கம்.. அதன்பின் உடலெல்லாம் வலி..லிங்காயத் மடாதிபதிக்கு எதிராக சிறுமிகள்.!

கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக, 64 வயதான லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தால் நடத்தப்படும் பள்ளியில், மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கடந்த செப்டம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு தலைமை தாங்கிய சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் கடந்த காலங்களில் செய்தியாளர்களிடம் கூறுகையில், … Read more

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலையில் 16ம் தேதி நடை திறப்பு

திருவனந்தபுரம்: நான்கு வருடங்களுக்குப் பின்னர் பக்தர்களை முழு அளவில் வரவேற்க சபரிமலை தயாராகி வருகிறது. கடந்த 2018 மற்றும் 2019 வருடங்களில் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 2 வருடமும் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் 2 வருடங்களிலும் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதன் காரணமாக கோயில் வருமானமும் குறைந்தது. … Read more

காட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்றம்

கட்டாய மதமாற்றத்தை தடுப்பது பற்றி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  கட்டாய மத மாற்றத்தை “மிகவும் தீவிரமான” பிரச்சினையாகக் கருதிய உச்ச நீதிமன்றம், திங்களன்று மத்திய அரசை தலையிட்டு, இந்த நடைமுறையை கட்டுப்படுத்த நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. கட்டாய மத மாற்றங்களை நிறுத்தாவிட்டால் “மிகவும் கடினமான சூழ்நிலை” உருவாகும் என்றும் அது எச்சரித்துள்ளது. நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் … Read more

ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: 25 பேருக்கு அர்ஜுனா விருது

டெல்லி: விளையாட்டு வீரர், வீராங்கணைகள் 25 பேருக்கு அர்ஜுனா விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரும் 30-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார். 2022-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் … Read more

கிராம நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா? – உயர்நீதிமன்றங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கிராம நீதிமன்றங்களை அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனு மீது அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இந்திய குடிமகன் யாரும் சமுதாய பொருளாதார மற்றும் இதர காரணங்களுக்காக நீதி பெறுவதில் தாமதம் இருக்கக் கூடாது எனவும், இதன் காரணமாக கிராமங்களில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தின்படி பல்வேறு மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுநல அமைப்பு ஒன்று சார்பாக … Read more

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் வேலை.. 10-வது படித்திருந்தால் போதும்..!!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட யூனியனின் ஆயுதப் படையாகும். 1969-ம் ஆண்டில், 3,129 பணியாளர்களின் உதவியுடன் நிறுவப்பட்ட படையின் பலம், 01.06.2021 நிலவரப்படி 1,63,613 ஆக உயர்த்தப்பட்டது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 12 ரிசர்வ் பட்டாலியன்கள் மற்றும் 8 பயிற்சி நிறுவனங்கள் உட்பட 74 அமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆனது Const. / Cook, Const. / Cobbler, Const./Tailor, Const. … Read more

பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேரள மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரி்க்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த குழு, பால் விலையை உயர்த்துவது தொடர்பான தமது பரிந்துரை அறி்க்கையை அரசிடம் அளி்த்துள்ளதாம். இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், … Read more

சூப்பர் பவர் – 90 வெடிபொருளை பயன்படுத்தி ராஜஸ்தானில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு: 650 பயணிகள் உயிர்தப்பினர்; ‘உபா’ சட்டத்தில் வழக்குபதிவு

உதய்பூர்: ராஜஸ்தானில் சூப்பர் பவர் – 90 என்ற வெடிபொருளை பயன்படுத்தி ரயில் தண்டவாளம் தகர்ப்பு முயற்சி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக 650 பயணிகள் உயிர் தப்பினர். உபா சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் மாநிலம் உதய்பூர் – அகமதாபாத் ரயில் பாதையில் ஓடா ரயில்வே பாலத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென வெடிச் சத்தம் ஏற்பட்டது. அதையறிந்த கிராம மக்கள் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த வெடிச் சத்தத்தால் … Read more

இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்ற விவகாரம்; பஞ்சாப் கல்லூரியில் மாணவர்களுக்குள் கல்வீச்சு: 9 பேர் படுகாயம்; போலீஸ் குவிப்பு

மோகா: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோற்ற விவகாரத்தால் பஞ்சாப் கல்லூரியில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் கல் கலன் கிராமத்தில் லாலா லஜ்பத் ராய் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்படுகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பீகார் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. … Read more