மநீம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மநீம தலைவர் கமல்ஹாசன், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் வீடு திரும்புவார் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம்செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. … Read more

திகார் சிறையில் தரமான சாப்பாடு… 8 கிலோ ஏறிட்டாரு…: அமைச்சரின் அடுத்த வீடியோ வெளியானது

புதுடெல்லி: திகார் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தரமான உணவு கிடைப்பதால் 8 கிலோ எடை கூடிவிட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிறை விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்வதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக புதுபுது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. முதலில் … Read more

நாட்டையே உலுக்கிய சம்பவம்…மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா… பிடிப்பட்ட மாணவர் செல்போனில் 1,200 வீடியோக்கள்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒசகெரேஹள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள கழிவறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் சென்று இருந்தனர். அப்போது மாணவிகளின் கழிவறையில் ஒரு வாலிபர் நின்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் … Read more

இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வாரம் அவகாசம்

புதுடெல்லி: இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று கூறுகிறது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், அரசியல் சாசனத்தின் … Read more

தமிழக அரசு எழுத்துப்பூர்வ அறிக்கை ஜல்லிக்கட்டு எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. … Read more

ஆணுறுப்பை துண்டித்துக்கொண்ட இளைஞர்… மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் பங்கான் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாமல் முண்டா. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷியாமல் நேற்று (நவ. 23) வீட்டின் கழிவறைக்கு சென்றுவிட்டு தனது அறைக்கு சென்றார்.  அதன்பின் அவரது சகோதரர் நிர்மல் முண்டா கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ரத்தக்கறை படிந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தாய், … Read more

17 வயது சிறுவனுக்கு அறிய வகை நோய் – உடல் முழுவதும் முடி..!!

மத்திய பிரதேச மாநிலம் நந்த்லேடா கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் படிதார் (17). 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், ‘வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்’ என்ற அரியவகை நிலையால், இவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய நோயால் ஒருவர் பாதிக்கப்படும்பட்சத்தில், அவரின் உடல் முழுதும் அசாதாரணமான முறையில் அதிகப்படியான முடி வளரும். இந்நோய் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கலாம். இடைக்காலத்தில் வாழ்ந்த மக்களில் 50 நபர்கள் மட்டுமே இந்த அரிய நிலையால் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பப்படுகிறது. லலித்தின் உடல் முழுதும் முடியானது அதிகப்படியாக … Read more

புதிய கட்டிடத்தில் குளிர்கால தொடர்?

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார் என்று ஒன்றிய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து நவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் புதிய கட்டியம் தயாராகிவிடும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து … Read more

அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்புகள் இல்லை: தயாரிப்பில் மந்தநிலை

புதுடெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வேயில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சென்னை ஐசிஎப்.பில இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. மாதத்துக்கு 7 முதல் 8 ரயில்களை தயாரித்தால் மட்டுமே, இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால், இப்போது அதை விட குறைவாகவே  இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தடுத்து கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், வசதிகள் இந்த … Read more