மகாராஷ்டிரா | பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரை அவமதித்த சமூக ஆர்வலர்; மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புனே: நெற்றியில் பொட்டு வைக்காததால் பெண் பத்திரிகையாளருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் பேட்டியளிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூகநல செயற்பட்டாளர் சம்பாஜி பிடே. இவர் நேற்று தெற்கு மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க வந்தார். முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அவரிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் நின்றிருந்தனர். आज माझ्यासोबत घडलेला हा सगळा प्रकार.. आपण एखाद्याचं वय बघून त्याला मान … Read more

குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022: தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

Gujarat Assembly Elections 2022: குஜராத் சட்டசபை தேர்தல் 2022 டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த … Read more

தெலுங்கானாவில் 57வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: பழங்குடி மக்களுடன் பாரம்பரிய 'திம்சா' நடனமாடி ராகுல்காந்தி உற்சாகம்..!!

சங்கராரெட்டி: தெலுங்கானாவில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார். நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, சங்கராரெட்டி மாவட்டம் ருத்ராராம் என்ற இடத்தில் இருந்து இன்றைய பயணத்தை தொடங்கினார். முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க ‘திம்சா’ நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற … Read more

உத்தரப் பிரதேசம் மதுரா நகர் ஹோட்டலில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு

மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் விருந்தாவன் நகரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மதுரா – விருந்தாவன் சாலையில் உள்ள விருந்தாவன் கார்டன் என்ற தங்கும் விடுதி உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள சமையலறை பொருட்கள் வைக்கும் அறையில் வியாழக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இரண்டு ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியானது… ரெடியாகும் அரசியல் கட்சிகள்!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது பாஜக 111, காங்கிரஸ் 62 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளன. இம்மாநில சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. முதல் கட்டத் தேர்தல் (89 தொகுதிகள்)இரண்டாம் கட்டத் தேர்தல் (93 தொகுதிகள்)வேட்புமனு தாக்கல் கடைசி தேதிநவம்பர் 14நவம்பர் 17வேட்புமனு பரிசீலனைநவம்பர் 15நவம்பர் 18திரும்பப் பெற கடைசி நாள்நவம்பர் … Read more

இடுக்கி அருகே சதுரங்கப் பாறையில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்

பாலக்காடு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனாவை அடுத்துள்ள சதுரங்கப்பாறையில் நீலக்குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்குவதை பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு குவிந்தவாறு உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனாவை அருகே உள்ள சுற்றுலாத்தலமான சதுரங்கப்பாறை. இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துள்ளது. இவை சுற்றுலா பயணிகளையும் கண்களை கவர்ந்தவாறு உள்ளது. இதனால் இங்கு காதல் ஜோடி, குடும்பத்தினரும், சுற்றுலா பயணிகளும் படையெடுத்த வருகின்றனர். பனிப்பொழி, கடுமையான குளிர் வீசுவதையும் பாராமல் மக்கள் தங்களது மொபைல் … Read more

மத்தியபிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாக 2 பேர் மீது பொதுமக்கள் தாக்குதல்

போபால்: மத்தியபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்சிங் தாஸ் (50). இவரது நண்பர் ராம்நிவாஸ் மெஹர் (52). இவர்கள் இருவரும் பிலாஸ்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் ஒரு மூட்டையை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது சுமித் நாயக் என்பவர் இவர்கள் மீது சந்தேகம் கொண்டு வழிமறித்து என்ன எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மூட்டையில் மாட்டிறைச்சி உள்ளது என்று நர்சிங் தாஸ் கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்களை ஒன்று சேர்த்த சுமித் … Read more

இமாச்சலில் இந்த மாதம் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்: பரப்புரையில் ஈடுபட அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் இந்த மாதம் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இமாசலப்பிரதேசத்தில் ஹமிர்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். ராஜாக்களும், ராணிகளும் உள்ள காங்கிரஸ் சாமானியமாக ஒரு நபர் முதலமைச்சர் ஆகவே முடியாது என்று தெரிவித்தார். தற்போதைய தேர்தலில் முதலமைச்சர் பதவி தருவதாக 10 பேரிடம் காங்கிரஸ் … Read more

சிறுவனுக்கு கராத்தே நுட்பம் சொல்லிக் கொடுத்த ராகுல்: பாஜகவுக்கு மறைமுகமாக இடித்துரைத்த காங்கிரஸ்

ஹைதராபாத்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த யாத்திரையின் 56வது நாளில் அவர் தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு சிறுவன் கராத்தே செய்து காட்ட அவருக்கு சில நுணுக்கங்களை திருத்திக் கொடுத்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியும் ஐகிடோ என்ற கராத்தே முறையில் பிளாக் பெல்ட் பெற்றவர். அதனால், அவர் அந்தச் சிறுவனுக்கு உதவினார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. கூடவே, … Read more

தொட முடியாத காங்கிரஸ்… வீழ்த்த முடியாத பாஜக… குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுவாரஸியம்!

குஜராத் மாநில சட்டமன்றத்தின் 182 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்று நண்பகல் அறிவிக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. முதல்முறை 1995ல் குஜராத்தில் ஆட்சியை பிடித்தது பாஜக. அப்போது 121 இடங்களை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து 2002 சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி முதல்வரான போது, பாஜக 127 என புதிய உச்சம் தொட்டது. பின்னர் 2007ல் இரண்டாவது முறை மோடி ஆட்சியில் அமர்ந்த போது 117 … Read more