பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் வெற்றி வெற்றி பெற பாஜக, பீகாரில் பெரும் பின்னடைவை சந்தித்தது. நாடு முழுவதும் “ஆபரேஷன் தாமரை” திட்டத்தின் மூலம், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது அல்லது ஆளும் அரசுடன் அங்கம் வகிப்பது என பாஜக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை வெற்றியடைந்தது. ஆனால் டெல்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் “ஆபரேஷன் தாமரை” தோல்வி அடைந்துள்ளது. … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ காலமானார்..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் காலமானார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர், பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்றும் சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள் – காரணம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில், வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைவாக வழங்கியதாகக் கூறி, ஆசிரியர்களை, மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்று உள்ளது. அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதால் ஆத்திரம் … Read more

ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள் : செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்தது காரணமா?

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் கோபி கந்தர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வில், 11 மாணவர்கள் “DD” க்ரேடு பெற்றுள்ளனர். இது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்ததைக் குறிப்பதாகும். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கணித ஆசிரியரையும், பள்ளி எழுத்தரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். நடைமுறைத் தேர்வில் ஆசிரியர் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அதற்காக தேர்வில் தோல்வியடைந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஜார்க்கண்ட் கல்வி கவுன்சிலின் தளத்தில் மதிப்பெண்களை ஆன்லைனில்  பதிவேற்றியதற்காக … Read more

டெல்லியில் இன்று முதல் தனியார் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல்

டெல்லி: டெல்லியில் இன்று முதல் தனியார் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை முதல் டெல்லியில் சில்லறை மதுபான கடைகளை மாநில அரசே நடத்த திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி அரசு 300க்கு மேற்பட்ட  சில்லறை மதுபான கடைகளை திறக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

2024 தேர்தலுக்கு ஆயத்தம் – நிதிஷ் குமாருடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தெலங்கானா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பீகார் … Read more

என்ஜின் தீ விபத்து காரணமாக சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை!

சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்திடம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்த ஹெலிகாப்டர்களில் தொடர்ந்து என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதனைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிடம் 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஹெலிகாப்டர்களை தயாரித்த அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது. … Read more

ஒன்றிய அரசு தன் கையிருப்பில் இருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டம்..!!

டெல்லி: ஒன்றிய அரசு தன் கையிருப்பிலிருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசு கொள்முதல் செய்த விலையைவிட கிலோவுக்கு ரூ.8 குறைத்து மாநிலங்களுக்கு கொண்டை கடலை வழங்கப்படும். ஒன்றிய அரசு தரும் கொண்டை கடலையை மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டம், மதிய உணவு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.

சைலண்ட் மோடில் இருந்து திடீரென விழித்த அன்னா ஹசாரே… கெஜ்ரிவாலின் தூக்கம் கலைக்க கடிதம்!

அன்னா ஹசாரே… பத்து ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நபர். தமது உண்ணாவிரத போராட்டங்களின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசை கதிகலங்க வைத்த காந்தியவாதி. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை மக்களே நேரடியாக தண்டிக்க வகை செய்யும் ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இவரது இந்த கோரிக்கையை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு நிராகரித்ததையடுத்து, 2011 ஆம் ஆண்டு … Read more

சிபிஐ சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றசாட்டு

டெல்லி: சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவாகி இருந்தது. அவரது வங்கி லாக்கரையும் சி.பி.ஐ. நேற்று சோதனை செய்தது. டெல்லி அரசியலில் சி.பி.ஐ. … Read more