நிதிஷ்குமார் – சந்திரசேகரராவ் சந்திப்பு : எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை என பாஜக விமர்சனம்
பீகார் சென்றுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளையும் சந்திரசேகர ராவ் வழங்கவுள்ளார். மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவரான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் முயற்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் … Read more