மாணவிகளின் ஆய்வுப் படிப்புக்கு ஷாருக்கான் உதவி

மும்பை: பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாருக்கான், கல்விக்காக நிறைய உதவிகள் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது கல்வி அறக்கட்டளை மூலம் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி ஆய்வு செய்து வரும் மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறார். இதுபோன்ற பணியை அவர் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கினார். முதல் மாணவியாக கேரளாவிலுள்ள திருச்சூரை சேர்ந்த கோபிகா உதவித்தொகை பெற்றார். இதற்கிடையில், கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தப் பணியை தற்போது ஷாருக்கான் மீண்டும் … Read more

அமெரிக்காவில் அமிதாப் பச்சனுக்கு சிலை வைத்த ரசிகர்

மும்பை: அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் வசித்து வருபவர், குஜராத்தை சேர்ந்த சேத். அங்கு இவர் 30 வருடங்களாக பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகரான இவர், அமெரிக்காவில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கு முன்புறம் அமிதாப் பச்சனுக்கு முழு உருவச் சிலை வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கும், என் மனைவிக்கும் அமிதாப் பச்சன் கடவுள் போன்றவர். நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரது கருத்து களைப் … Read more

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..! – ஜம்மு காஸ்மீரில் சோகம்..!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ என்ற இடத்தில் உள்ள பள்ளத்தில் டாடா சுமோ கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனருக்கு பாயாசம் செய்து கொடுத்த அமலா

ஐதராபாத்: தமிழில் ‘கணம்’என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’என்ற பெயரிலும் வரும் 9ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். கார்த்திக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகை அமலா, 31 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ளார். சர்வானந்த், ரீது வர்மா, நாசர், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் நடித்துள்ளனர். வாழ்க்கை யில் ஒவ்வொரு கணமும் நமக்கு முக்கியம் என்பதை சொல்லும் படம், அறிவியல் புனைகதையை வைத்து உருவாகியுள்ளது. … Read more

“ரிசார்ட் அரசியலில்” ஜார்க்கண்ட் | சத்தீஸ்கர் அழைத்துச் செல்லப்பட்ட ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள்

ராய்பூர்: ஜார்க்கண்டின் ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரிய அரசியல் நெருக்கடியின் காரணமாக, எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியான பாஜக பக்கம் போகாமல் இருக்க, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் ராய்பூரில் உள்ள மேஃபேர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற … Read more

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்..! – மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு..!

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார். பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை மிரட்ட முயற்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம். எல்லோரும் … Read more

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள நக்பால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வீரர்கள் அங்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ெதாடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் … Read more

பாஜகலின் அடுத்த தலைவர் யார்?- மோடி, அமித் ஷாவின் சாய்ஸ் இவர்தான்!

பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் மூன்று ஆண்டு பதவிக் காலம் 2023 ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து கட்சியின் புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்புது என்பது குறித்த ஆலோசனையில் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர இறங்கி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் விதிமுறைப்படி ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு முறைதான் தலைவர் பொறுப்பை வகிக்க முடியும் என்பதால் ஜே.பி.நட்டாவுக்கு மீண்டும் … Read more

“ நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்..!” – குடியரசு தலைவர் விநாயக சதுர்த்தி வாழ்த்து..!

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட இருக்கும் நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் … Read more

காவல் நிலையம் முன் மாறிமாறித் தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்திய போலீசார்..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் முன் மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. பட்டாம்பி பகுதியில் இயங்கிவரும் அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவர்கள், பள்ளிக்கு வெளியே இரு பிரிவினராகப் பிரிந்து மாறி மாறி தாக்கிகொண்டனர். காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீசார் மோதலை தடுத்துநிறுத்தி மாணவர்களை அனுப்பிவைத்தனர். Source link