9 ஆண்டுகள் நீடித்த வழக்கு : நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணி

நொய்டாவில் செக்டார் 93A 2 பகுதியில் சூப்பர்டெக் நிறுவனத்தால் அபெக்ஸ் மற்றும் செயேன் என்ற இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ்-சில் 32 மாடிகளும்,  செயேனில் 29 மாடிகளும் உள்ளன. இந்த இரு கட்டடங்களும் சுமார் 100 மீட்டர் உயரம் கொண்டவை. இவை குதுப்மினாரை விட அதிக உயரமானவை.  பிரம்மாண்டமான இந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டதால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு 9 ஆண்டுகள் நடைபெற்றது. இவ்வழக்கு … Read more

இந்தியாவில் ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம்

மும்பை: 2024-27 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை சுமார் ரூ.24,000 கோடிக்கு டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஏலத்தில்  எடுத்துள்ளது. அடிப்படை கட்டணமாக ரூ.11,500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில் இருமடங்கு அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டது.

தேசத்துக்கு காதி; தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டரா? – பிரதமருக்கு ராகுல் கண்டனம்

புதுடெல்லி: தேசத்துக்கு கதர் ஆடைகளைப் பரிந்துரைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார். பிரதமர் மோடியின் பேச்சும் செயலும் முரண்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னதாக நேற்று பிரதமர் காதி உத்ஸவ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குஜராத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழா நிறைவைக் கொண்டாடும் வகையில் 7500 பெண்கள் கை ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி … Read more

பஞ்சாப் ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணம் கொள்ளை

பஞ்சாப்: ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை தொடர்பாக ஏடிஎம்மை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணி.! – ராணுவத்தினரால் மீட்பு

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச் சேர்ந்த அகோஸ் வெர்ம்ஸ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் தனியாக பல பகுதிகளுக்கும் வலம் வந்தார். மலையேற்ற வீரரான அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலையேற்றம் செய்யும் போது வழி தவறி, சும்சாம் பள்ளத்தாக்கில் உள்ள உமாசிலா கணவாய் பகுதியில் காணாமல் போனார் என்பது தெரிய வந்தது. … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக கட்சியின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிறகு கட்சியில் இருந்து வெளியேறும் மூத்த தலைவர் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் பஞ்சாபில் அமரீந்தரை போல், ஜம்முவில் காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்துவார் என … Read more

காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்த தாய்!

கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த நான்கு வயது சிறுவனின் காலை சொந்த தாய் அடுப்பில் வைத்து காயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.  அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த சுப்ரமணியன் மற்றும் ரஞ்சிதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளனர். மூத்த மகனை சுப்பிரமணியனும், இளைய மகனை ரஞ்சிதாவும் கவனித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் ரஞ்சிதா தனது இளைய மகனுடன் உண்ணிகிருஷ்ணன் என்ற … Read more

குஜராத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி

காந்திநகர்: குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ,4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். 2001 நிலநடக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் பகையில் 470 ஏக்கரில் வனநினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.  குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த … Read more

நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுக -கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம்

நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி, கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் பாஜக பிரமுகர், டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் உள்பட பன்முகத்தன்மை கொண்ட சோனாலி போகட் (42), கடந்த 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பல்வேறு … Read more

'கட்சியில் மூத்தவர்களைக் கையாளத் தெரியவில்லை' – ராகுலை காரணம் காட்டி எம்.ஏ.கான் விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் அண்மையில் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.கான் விலகினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மேலுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏம்.ஏ.கான் தெலங்கானாவைச் சேர்ந்தவர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். சிறுபான்மையினர் ஆதரவு பெற்றவர். இந்நிலையில் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகியுள்ளார். ராகுல் மீது புகார்: ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமே … Read more