பெண்ணின் முதுகில் ஏறி படமெடுத்த நாகப்பாம்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம்,  கலபுர்கி மாவட்டம், அப்சல்புரா தாலுகா, மல்லாபாத் கிராமத்தில் பாகம்மா பண்டதாள என்பவர், அவருக்கு சொந்தமான வயல் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். பொதுவாக வயல் வெளியில் பாம்புகள் வசிப்பது இயல்பானது. நேற்று காலை பாகம்மா பண்டதாள, வீட்டு வாசலில் இருந்து கயிறு கட்டீலில் படுத்து கொண்டிருந்தார். அப்போது நிலத்தில் இருந்து வந்த நாகபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்து கொண்டிருந்த பாகம்மா மீது ஏறி அவர் முதுகில் அமர்ந்த படம் எடுத்து நின்றது. … Read more

வந்தே பாரத் விரைவு ரயில், சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியது

வந்தே பாரத் விரைவு ரயில், சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியுள்ளது. நவீன அம்சங்கங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன், அதிவேகத்தில் செல்ல கூடிய வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் கோட்டா மற்றும் மத்திய பிரதேசத்தின் நாக்டா இடையே நேற்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் அந்த ரயில் 180 கி.மீ. வேகத்தை எட்டியது. அதிவேகத்தில் அந்த ரயில் சென்ற போது தண்ணீர் நிரப்பபட்ட கண்ணாடி கிளாஸ் நிலையாக இருந்த … Read more

உள்ளாடைகளை அவிழ்த்து சோதனை: கேரள மாணவிகளுக்கு 4ம் தேதி மீண்டும் நீட்

திருவனந்தபுரம்: மருத்துவ  மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 17ம் தேதி  நடைபெற்றது. இதை எழுதிய லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கேரளாவில்,  கொல்லம் மாவட்டம், ஆயூர் பகுதியிலுள்ள தனியார்  கல்லூரியில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனை செய்தது சர்ச்சையானது. நாட்டின் வேறு சில இடங்களிலும் இதுபோல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கேரளாவில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் … Read more

ராட்டையில் நூல் நூற்ற பிரதமர் நரேந்திர மோடி..! – “ காதி உத்சவ்” நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

“காதி உத்சவ்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு காதியின் பெருமை குறித்து பேசியுள்ளார். அந்த நிகழ்வில் அவரே ராட்டையில் நூலும் நூற்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பாக இந்தியா தனது 75வது சுதந்திர தின விழாவினை கொண்டாடியது. இதனை முன்னிட்டு அகமதாபாத்தில் ‘காதி உத்சவ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தின் போது காதி மற்றும் அதன் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ‘காதி உத்சவ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து … Read more

லத்ரது அணை பகுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் படகு சவாரியில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜே.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பேருந்தில் ஒன்றாக சென்ற அவர்கள் மீண்டும் ராஞ்சிக்கே திரும்பியுள்ளனர். நிலக்கரி சுரங்க குத்தகையை தனது பெயரிலேயே ஒதுக்கீடு செய்த புகாரில் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது பற்றி ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராஞ்சியில் இருந்து 3 பேருந்துகளில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் … Read more

ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி | நீடிக்கும் தகுதிநீக்க சஸ்பென்ஸ் – எம்எல்ஏக்களுடன் படகு சவாரி செய்த முதல்வர் ஹேமந்த்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் தகுதி நீக்கம் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் சஸ்பென்ஸ் நீடித்து வரும்நிலையில், ஆளும் கூட்டணி கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஹேமந்த் சோரன் படகு சவாரி செய்துள்ளார். தகுதி நீக்கம் குறித்து ஆளுநர் உத்தரவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 3 மணி அளவில் முதல்வர் ஹேமந்த், தனது கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 49 பரையும் தனது இல்லத்தில் இருந்து 3 வால்வோ சொகுசு பேருந்துகளில் அழைத்துக்கொண்டுச் சென்றார். அவர் ஜார்கண்டை … Read more

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு..? – முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னெச்சரிக்கை..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு அளித்தது . இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் … Read more

சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் 45 வகை மருந்துகளின் விலை மாற்றியமைப்பு; தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்

புதுடெல்லி: சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான 45 வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றியமைத்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ), நாடு முழுவதும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை-2013-ன்படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றி அமைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய்த்தொற்றுகள், … Read more

நான் மத்திய உளவுத்துறை போலீஸ்.. திமுக பிரமுகரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் சம்பத் (49). திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சம்பத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘நான் மத்திய உளவுத்துறை போலீஸ். நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்துள்ளது. நீங்கள் வருமானம் குறித்த கணக்கு காட்டாமல் உள்ளீர்கள். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை … Read more

பாதுகாப்புக்காக பீரோவில் மின் இணைப்பு.. மறந்து தொட்ட மூதாட்டி பரிதாப பலி..!

சீர்காழி அருகே, வீட்டின் பாதுகாப்புக்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானியர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில், குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக … Read more