2004-05 முதல் 2020-21ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகள் நன்கொடையாக ரூ.15,077 கோடி வசூல்; ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2004-05ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் தேசிய  கட்சிகள் ரூ.15,077 கோடிக்கு மேல் நன்கொடைகளை பெற்றுள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள்  மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த நன்கொடைகள் தொடர்பான  பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நன்கொடை தொடர்பான  விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2004-05ம் ஆண்டு முதல் … Read more

ட்விட்டர் நிறுவன அதிகாரிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு!

தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமனித தகவல் தொடர்பாக ட்விட்டர் நிறுவன அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், அந்நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு விசாரணை நடத்தியது. சசிதரூர் தலைமையிலான குழு நடத்திய இந்த விசாரணையில் பங்கேற்ற ட்விட்டர் நிறுவன அதிகாரிகள், தகவல் பாதுகாப்பு விதிமீறல் ஏதும் நடைபெறவில்லை என மறுத்தனர். கவனத்தைக் … Read more

இந்திய தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து சோமாலியாவை போல் மும்பையை தாக்குவோம்; காவல்துறை ஹெல்ப்லைனுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: சோமாலியாவில் நடந்த தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதலை நடந்துவோம் என்று இந்திய தீவிரவாத அமைப்புகளுடன் ெதாடர்புடைய கும்பல் மும்பை போலீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போக்குவரத்து போலீஸ் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த 19ம் தேதி பாகிஸ்தான் போன் எண்ணிலிருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் செய்தி வந்தது. அமெரிக்காவின் இரட்டை கோபுர குண்டுவெடிப்பு போன்று மும்பையில் குண்டுவெடிப்பு நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் திட்டத்தைச்  செயல்படுத்தும் பணியில் ஆறு … Read more

திடீரென மெசேஜ் பண்ணுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

சமூக ஊடங்களில் பழகிய 11ஆம் வகுப்பு மாணவி தனக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தியதால் கோபமடைந்த இளைஞர் மாணவியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த 16 வயது 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அர்மான் அலி என்பவருடன் சமூக ஊடகம் மூலம் நட்பாகி பேசி வந்துள்ளார். இரண்டு வருடங்களாக சமூக ஊடகம் வழியாகவே பேசி பழகிவந்த அந்த மாணவி திடீரென அர்மான் அலியுடன் பேசுவதை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு … Read more

பிறந்தநாள் பரிசாக வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை..! – தேர்தல் ஆணையம் அசத்தல் அறிவிப்பு ..!

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும், அப்படி பதிவு செய்த பிறகு 18வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். எனவே 17 வயது முடிந்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சந்திரா பாண்டே, இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் … Read more

எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும்; ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

மும்பை: எரிசக்தி உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கட்கரி தெரிவித்தார். சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் இன்று ‘தேசிய இணை-உற்பத்தி விருதுகள்-2022’ வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- சர்க்கரை அளவுக்கு அதிகமாக … Read more

தலைவிரித்தாடும் ஊழல்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 13000 பள்ளிகள் – பாஜக அரசுக்கு நெருக்கடி!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு பதவியேற்றார். இந்த நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் ஊழல் மண்டிக்கிடப்பதாக குற்றஞ்சாட்டி கர்நாடகாவில் உள்ள 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சங்கங்கள் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் அடுத்த … Read more

“அன்று மட்டும் இப்படி நடந்திருந்தால் காங்கிரஸுக்கு இந்த நிலைமை வந்திருக்காது”-மணீஷ் திவாரி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகி வரும்நிலையில், அக்கட்சிக்குள்ளேயும், வெளியேயும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இந்த … Read more

‘மத மோதல்களுக்கு வாய்ப்பு’ – முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: மத ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃப்ரூக்கியின் நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. டெல்லியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு அரங்கில் இன்று (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கியின் ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் டெல்லி போலீஸிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதேவேளையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் டெல்லி காவல் ஆணையர் … Read more

14 நாட்களில் புதுக்கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத் – காஷ்மீர் தேர்தலுக்கு குறி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 14 நாட்களில், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக, அவரது நெருங்கிய ஆதரவாளர் ஜி.எம்.சரூரி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என, பல பதவிகளை வகித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் … Read more