தலைவிரித்தாடும் ஊழல்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 13000 பள்ளிகள் – பாஜக அரசுக்கு நெருக்கடி!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு பதவியேற்றார். இந்த நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் ஊழல் மண்டிக்கிடப்பதாக குற்றஞ்சாட்டி கர்நாடகாவில் உள்ள 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சங்கங்கள் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் அடுத்த … Read more

“அன்று மட்டும் இப்படி நடந்திருந்தால் காங்கிரஸுக்கு இந்த நிலைமை வந்திருக்காது”-மணீஷ் திவாரி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகி வரும்நிலையில், அக்கட்சிக்குள்ளேயும், வெளியேயும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இந்த … Read more

‘மத மோதல்களுக்கு வாய்ப்பு’ – முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: மத ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃப்ரூக்கியின் நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. டெல்லியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு அரங்கில் இன்று (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கியின் ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் டெல்லி போலீஸிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதேவேளையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் டெல்லி காவல் ஆணையர் … Read more

14 நாட்களில் புதுக்கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத் – காஷ்மீர் தேர்தலுக்கு குறி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 14 நாட்களில், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக, அவரது நெருங்கிய ஆதரவாளர் ஜி.எம்.சரூரி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என, பல பதவிகளை வகித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் … Read more

ஜார்க்கண்ட்டில் ஓர் கூவத்தூர் கலாட்டா.. 3 பேருந்துகளில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஹேமந்த்!

ஆட்சியை தக்க வைக்க எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் தன் பதவியைப் பயன்படுத்தி சுரங்க உரிமத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணைய … Read more

இந்தியாவின் 'தேஜஸ்' போர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா விருப்பம்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை வாங்க அர்ஜென்டினா ஆர்வம் கொண்டு உள்ளதாகவும், அந்நாட்டு விமானப்படையில் இணைக்கவும் திட்டமும் அந்நாட்டிடம் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ளார். அப்போது, அந்நாட்டு அதிபர் ஆல்பெர்டோ பெர்ணாண்டசையும், பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் சன்டியாகோ கபிரியோவை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். … Read more

டெல்லியில் இன்ஸ்டாகிராமில் பேசுவதை நிறுத்திய சிறுமி மீது துப்பாக்கிசூடு: டெல்லியில் பரபரப்பு சம்பவம்

டெல்லி: டெல்லியில் இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது மாணவி பேசுவதை நிறுத்தியதால் அப்பெண் பள்ளியில் இருந்து திரும்பும் போது துப்பாக்கியால் சுட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு உதவியதாக மேலும் இருவரை கைது செய்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஜார்கண்ட் பாஜக போர்க்கொடி

புதுடெல்லி: சுரங்க ஒதுக்கீடு தொடர்பான அரசு ஒப்பந்தத்தை தனக்கே ஒதுக்கீடு செய்ததற்காக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக., … Read more

ஜார்க்கண்டில் 'கூவத்தூர்' பார்முலா – ஆட்சியை தக்கவைக்க முதல்வர் சோரன் அதிரடி ப்ளான்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியாக, அனைத்து எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதன் மூலம் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள். இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ … Read more