“நீங்க ரைட் விங் இல்லை, ரைட் 'திங்'கை பேசியுள்ளீர்கள்” – குஷ்புவுக்கு சசி தரூர் பாராட்டு

புதுடெல்லி: பாஜகவின் குஷ்பு சுந்தருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். முன்னாள் கட்சித் தோழி என்பதால் பாராட்டவில்லை, பில்கிஸ் பானு வழக்கில் நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாகாக் கூறி பாராட்டியுள்ளார். அண்மையில் குஷ்பு ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில் குஷ்பு, “ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மோசமாக தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுதும் நீங்காத ஆன்ம ரணத்தைப் பெற்றிருக்கிறார். அவருக்கு நீதி … Read more

சாப்பாடு கொடுக்கும் போது தகராறு: மனநலம் குன்றிய மனைவியை கொன்ற கணவன்

குர்கான்: அரியானாவில் மனநலம் குன்றிய மனைவிக்கு சாப்பாடு கொடுக்கும் போது ஏற்பட்ட தகராறால், அவரை கழுத்து நெரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குர்கான் அடுத்த சூரிய விஹார் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீபக் கிர்பத் (59). இவரது மனைவி பூனம் அரோரா (58). இவர்களுக்கு மான்யதா வில்லியம் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மனநலம் குன்றிய தனது மனைவி பூனம் அரோராவை தீபக் கிர்பத் கவனித்து வந்தார். இந்நிலையில் … Read more

ஜம்மு காஷ்மீரின் உரியில் என்கவுன்ட்டர் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமல்கோட் என்ற இடத்துக்கு அருகே 3 தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் மீது ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இங்கு கடந்த 72 மணி நேரத்தில் போதை பொருள் கடத்தல் முயற்சியும் … Read more

புதுக்கட்சி தொடங்குகிறார் குலாம் நபி ஆசாத்? – காஷ்மீர் தேர்தலுக்கு ஆயத்தம்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ள குலாம் நபி ஆசாத், விரைவில், புதுக்கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தை ஜம்மு – காஷ்மீர் பிரசார குழு தலைவராக கட்சியின் … Read more

திருமண விழாவில் 3 குழந்தை உட்பட 5 பேர் தீயில் கருகி பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

மொராதாபாத்: மொராதாபாத்தில் நடந்த திருமண விழாவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரும் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக மூழ்கி இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டு பெண்களும், மூன்று குழந்தைகளும் பலியாகினர். சம்பவ … Read more

ஹைதராபாத் | பாஜக எம்எல்ஏ மீது குண்டர் சட்டம் – கைது செய்து மீண்டும் சிறையிலடைப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக இவர் மீது புகார்கள் கூறப்பட்டன. அதன் அடிப்படையில் ராஜாசிங்கை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து நாம்பல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றமும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், எம்எல்ஏவை கைது செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டுமெனவும் கூறி ராஜாசிங் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், மத கலவரத்தை தூண்டும் வகையில் மீண்டும் சமூக ஊடகங்களில் பேசப்போவதாக … Read more

உ.பி.யில் 3 மாடி கட்டத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் உடல் கருகி பலி!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கு தீவிரமாக பரவியது. தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நெருப்பை கட்டுப்படுத்த போராடினர். தீப்பிடித்த கட்டடத்தில் இருந்து காயங்களுடன் 7 பேரை மீட்ட வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று விலகிக்கொள்வதாக கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.  இது தொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதியுள்ள கடிதத்தில், `கட்சியில் சோனியா காந்தி வெறும் பெயரளவுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவராக செயல்படுகிறார். கட்சியின் அனைத்து முடிவுகளையும் ராகுல் … Read more

ஜார்க்கண்ட் முதல்வரை தகுதி நீக்கம் செய்ய ஆளுநரிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை: பின்னணி என்ன?

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநரிடம் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில்ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக அவர்மீது பாஜக குற்றம் சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் … Read more

என்.வி.ரமணா: மறக்க முடியாத தீர்ப்புகளும், விடைபெறும் தருணமும்!

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்றம் திகழ்கிறது. இதன் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பது பலரது கனவாக இருக்கும். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவிற்கு பின்னர் ஏப்ரல் 24, 2021 அன்று பதவியேற்றவர் தான் என்.வி.ரமணா. இவர் இன்றைய தினம் (ஆகஸ்ட் 26, 2022) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. காலை 10.20 மணி முதல் … Read more