ஸ்வப்னா சுரேஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகத் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்தார். தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயர் மரது அனிஷ் என்றும் ஸ்வப்னா தெரிவித்தார். Source link

குஜராத் டிஜிட்டல் திருவிழாவில் பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கலந்துரையாடல்

அகமதாபாத் : இன்று நடக்கும் குஜராத் டிஜிட்டல் திருவிழாவில் பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கலந்துரையாட உள்ளனர். விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர்.பிரதமர் மோடியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து 7 பேரும் கலந்துரையாடுகின்றனர்.

’எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ : ஸ்விக்கி டெலிவரி ஊழியரின் வியக்கத்தகு செயல்!

மழைக்காலம் வந்தாலே போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிராஃபிக் ஜாமிற்கு பஞ்சமே இருக்காது. மேலும் ஊர்ந்து ஊர்ந்து செல்வதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதுவும் மழை நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நிலை வார்த்தையில் அடங்காது. மழை, டிராஃபிக் எல்லாவற்றையும் சமாளித்து முட்டி மோதி டெலிவரி செய்தால் சில கஸ்டமர்கள் அவர்களை ஏசவும் செய்வார்கள். ஆனால் இந்த மும்பை ஃபுட் டெலிவரி நபருக்கு அந்த கஷ்டங்கள் எதுவும் இருக்காது என்பது அண்மையில் வைரலான வீடியோ … Read more

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளும் பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கைவாக்கெடுப்பு நடக்கிறது. இதுதொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணிஇணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சிவசேனா … Read more

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே?

மும்பை : மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்று உள்ள நிலையில்,  ஷிண்டே வசம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைக்கால்: காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வாந்தி, … Read more

"வளர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை அளிப்போம்" பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

ஹைதராபாத்: இந்துக்கள் மட்டுமன்றி அனைத்துசமுதாய மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். வாக்குவங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை அளிப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. … Read more

படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார் லாலு பிரசாத் யாதவ்.!

பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தமது வீட்டுப் படிக்கட்டுகளில் தவறி விழுந்தார். அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்பட பலவித உடல் நல பாதிப்புகளால் அவதிப்படும் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.  Source link

வைர நகைகள் விற்பனையில் நடுத்தர மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது: இந்தாண்டு விழாக்கால விற்பனை 12% வரை உயரும் என எதிர்பார்ப்பு

மும்பை: வைர நகை விற்பனையில் நடுத்தர மக்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டு விழாக்காலத்தில் 10 முதல் 12 சதவீதம் விற்பனை உயரும் எனவும் டி பியர்ஸ் நிர்வாக இயக்குநர் சச்சின் ஜெயின் தெரிவித்தார். வைர உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டி பியர்ஸ், தனது ‘என்றென்றும் எப்போதும் வைரம்’ என்ற கருத்துருவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் 3 நாள் அரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  இதில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள … Read more

எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

மும்பை: எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா அரசு பதவியேற்றுள்ளது. இந்திய அரசியலில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியில் இணைவது வாடிக்கையாக இருந்தது. மகாராஷ்டிராவில் ஆளும் அரசில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு தலைவர்கள் மாறியுள்ளனர். … Read more