ரூ.30 கோடி மதிப்பிலான கப்பலை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பலை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவருமான பங்கஜ்மிஸ்ரா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி இயக்கப்பட்டு வந்த அந்த கப்பல், சட்டவிரோதமாக சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், பாறைகளை கொண்டு செல்ல பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  Source … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு.: சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.

’மோடி ஸ்டிக்கரும், கருப்பு மை பூச்சும்’.. செஸ் ஒலிம்பியாட் பேனரில் வெடித்த சர்ச்சை!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை ( ஜூலை 28) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுவென நடந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. … Read more

சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில் சிமெண்ட் சிலாப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்-துணை முதல்வர் தொகுதியில் அவலம்

சித்தூர் : சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில் சிமெண்ட் ஸ்லாப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  துணை முதல்வர் சொந்த தொகுதியில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கங்காதரநெல்லூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், வகுப்பறைகளில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து … Read more

மாமியார் இந்திராவை விஞ்சிய சர்வாதிகாரமா இது!.. சோனியா காந்தி சட்டத்திற்கு மேலானவரா?

இந்திரா காந்தி உண்மையில் சிறைக்குச் சென்றிருந்தார். 1975 அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். பிறகு, அனைத்து வகையான புலனாய்வு அமைப்புகளின் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார். ஆனால் சோனியா காந்தி எந்த சட்ட அமைப்பு விசாரணையையும் நேரடியாக எதிர்கொள்வது இதுவே முதல்முறை. நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் வழங்கிய சம்மனில் ஆஜராக சோனியா காந்தி செல்கிறார். அப்போது, பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது. ”மெயின் இந்திரா … Read more

ஆந்திராவில் கனமழையால் கால்வாயை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது-ஆசிரியர் பத்திரமாக மீட்பு

திருமலை : ஆந்திராவில் பெய்த கனமழையால் கால்வாயை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைநீரில் வீடுகள் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்திலும் … Read more

5G ஏலம் நடக்கும் நிலையில் கிராமங்களுக்கு 4G வழங்க BSNLக்கு ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தி அதன் சேவைகளை விரிவுப்படுத்தவும், ஊரகப் பகுதிகளுக்கு 4ஜி இணையதள சேவைகள் முழுமையாக கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அளித்துள்ளது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இனிவரும் காலங்களில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என இந்த … Read more

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ. 1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ. 1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம்; ஊழல் செய்யாத போது, பயம் எதற்கு?.. ஒன்றிய அமைச்சர் கேள்வி

டெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்பாடையது அல்ல என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துக்கர். ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, ‘யங் இந்தியா’ நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கும், அமலாக்கத்துறை சார்பில் தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் பங்குதாரரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே … Read more

பயணியின் தொல்லையால் திசை திருப்பப்பட்ட விமானம்..! – என்ன நடந்தது தெரியுமா..?

லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானம், முரடுபிடித்த பயணியால் அது உத்தேசித்துள்ள விமானப் பாதையில் இருந்து திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று என்பிசி நியூஸ் தெரிவித்துள்ளது. விர்ஜின் அட்லாண்டிக் விமானம் 141 யுனைடெட் கிங்டமில் உள்ள லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது, ஆனால் பயணிகளின் இடையூறுக்குப் பிறகு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குக்கு முன்பாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விர்ஜின் அட்லாண்டிக் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், … Read more