கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு உதவும் தியோகர் விமான நிலையம் திறந்து வைத்தார் மோடி; 12 கிமீ வாகனத்தில் பேரணி

தியோகர்: ‘புதிய விமான நிலையம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தியோகரில் 12 கிமீ தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனத்தில் ஊர்வலமாக  சென்ற அவர், 657 ஏக்கர் பரப்பளவில் ரூ.401 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர்,  ரூ.16,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். … Read more

சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மல்யுத்த விளையாட்டு வீரர் கிரேட் காளி வாக்குவாதம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மல்யுத்த விளையாட்டு வீரர் கிரேட் காளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பில்லூர் என்ற இடத்தில் சுங்கச்சாவடியை காரில் கடக்க முயன்றபோது ஊழியர்கள் சிலர், காளியை தடுத்து நிறுத்தி அடையாள அட்டையை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த காளி, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   Source link

ஓட்டு பெட்டி, மை உள்ளிட்ட ஜனாதிபதி தேர்தல் பொருள் மாநிலங்களிடம் ஒப்படைப்பு; அதிகாரிகள் சென்னை கொண்டு வந்தனர்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான பெட்டிகள், மை உள்ளிட்ட உபகரணங்கள், மாநில தேர்தல் அதிகாரிகளிடம் டெல்லியில் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டு பெட்டிகள், வாக்களிப்பதற்கு தேவையான சிறப்பு பேனா, வாக்குச்சீட்டு, தேர்தல் … Read more

மாநிலங்களின் வளர்ச்சியில் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் கொள்கையுடன் பணியாற்றுகிறோம் – பிரதமர் மோடி 

தேவ்கர்: சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது தேசிய சொத்துகள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ரூ.16,800 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, … Read more

மத்திய உள்துறையில் வாரிசு வேலை பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

துணை ராணுவப் படை உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர்கள், குழந்தைகளின் வயது, நிதித் தேவைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்படும். பின்னர் சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு வேலைக்கு சேருவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். தொடர்ந்து 3 அதிகாரிகள் கொண்ட குழு அளிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வேலை வழங்கப்படும் … Read more

செப்டம்பர் 4ம் தேதி திருவனந்தபுரம் நகர மேயர் சிபிஎம் எம்எல்ஏ திருமணம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சிபிஎம் (மார்க்சிஸ்ட் கட்சி) எம்எல்ஏ சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் செப்டம்பர் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன் (23). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகள் வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்டபோது அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வந்தார். அப்போது … Read more

"குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்து விடும்" – பிரதமர் மோடி எச்சரிக்கை

குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்து விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியில் உள்ளார். இம் மாநிலத்தில், தியோகர் விமானநிலையம் உட்பட 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை தொடங்கி வைத்தார். இதற்காக தியோகர் நகர் வந்த … Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர். தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி … Read more

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவின் ஜாமீன் நீட்டிப்பு

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவின் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பட்டியலின சமூகத்தினருக்கும், மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மோதலை தூண்டிவிட்டதாக இடதுசாரி ஆர்வலர்களை கைது செய்தனர். இதில் கவிஞர் வரவர ராவும் ஒருவர். இதனிடையே, தனது உடல்நிலையை காரணம் காட்டி … Read more