திருப்பதியில் பிரம்மோற்சவ விழா – பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள விழாவின்போது மாட வீதிகளில் காலையும், மாலையும் வாகன சேவை நடைபெறும். குறிப்பாக 27-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையும் நடைபெறும். 5-ம் நாளான அக்டோபர் 1-ம் தேதி 3-வது புரட்டாசி சனிக்கிழமை இரவு கருட சேவை நடைபெறும். … Read more