நாடு முழுவதும் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம் – ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கடந்த 1999-ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் மே 3-ம் தேதி தொடங்கி 3 மாதங்களாக போர் நடைபெற்றது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் பகுதிகளை … Read more

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு கட்டாயம் விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த டெண்டர் முறைகேடு வழக்கு கட்டாயம் வரும் 3ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம்,யாரும் ஒத்திவைக்க கோரிக்கை வைக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் வழக்கை சிபிஐக்கு மாற்றியமைக்க வேண்டும் … Read more

தேர்தல் ‘இலவச’ அறிவிப்பை தடுப்பது எப்படி? – வழிமுறைகளை ஆராய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தலின்போது இலவச திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை கவர்வதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவர். இந்த தேர்தல் இலவச அறிவிப்புகளை எதிர்த்து பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். தேர்தலில் வெற்றி … Read more

கேரளாவை தொடர்ந்து உத்தர பிரதேச பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: இறைச்சி, சந்தைக்கு தடை

பெரெய்லி: கேரளாவில் சமீபத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியது. வயநாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் பன்றிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் இந்த நோய் உறுதியானது. இதனால்  பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பன்றிகள் இறந்து வருகின்றன. மேலும், நோய் மேலும் பரவுவதை தடுக்க பன்றிகளை கொல்லும் நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் இந்த காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. பெரெய்லி மாவட்டத்தில் பரித்பூரில் உள்ள பண்ணையில் 20 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. அவற்றை பரிசோதனை … Read more

தாய் இறந்த நிலையில் தந்தையால் கைவிடப்பட்ட பிஹார் சிறுமி – 99.4% மதிப்பெண் பெற்று சாதனை

பாட்னா: தந்தையால் கைவிடப்பட்ட பிஹார் சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பில் 99.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் சிறுமி ஸ்ரீஜா. அவரது தாயார் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்ரீஜாவை, மனைவியின் தாயார் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார் அவரது தந்தை. தாய் இறந்து தந்தைகைவிட்டு விட்டதால் மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீஜாவை அவரதுபாட்டி தேற்றி பள்ளிக்கு அனுப்பினார். சில மாதங்களுக்கு முன்பு 10-ம் வகுப்புத் தேர்வை ஸ்ரீஜா எழுதியிருந்தார். … Read more

ஹாரன் அடித்தும் வழிவிடாததால் காதுகேளாத நபரை குத்திக் கொன்ற 15 வயது சிறுமி

சத்தீஸ்கரில் ஹாரன் அடித்தும் வழிவிடாததால் காது கேளாத நபரை கத்தியால் குத்திக் கொன்ற 15 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர். ராய்ப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசலிலில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்வதற்கு தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். அந்த வாகனத்தில் சென்ற 40 வயதுடைய நபர் வழிவிட மறுக்கவே ஆத்திரமடைந்த சிறுமி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் சரமாரியாக … Read more

பொருளாதார பாதை திட்ட சர்ச்சை சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: சீனா, பாகிஸ்தான் இடையே பல கோடி செலவில் பொருளாதார பாதை அமைக்கப்படுகிறது. இதற்கு சிபிஇசி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து கடந்த 2013ல் தொடங்கின.  இதற்கான பாதை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால், இத்திட்டத்திற்கு இந்தியா ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், சிபிஇசி திட்டத்தின் செயற்குழு கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இதில், சிபிஇசி திட்டத்தில் விருப்பமுள்ள 3ம் தரப்பு நாடுகளும் இணையலாம் என சீனாவும், பாகிஸ்தானும் அழைப்பு … Read more

எந்த கட்சியிலும் சேர மாட்டேன்: யஸ்வந்த் சின்கா அறிவிப்பு

கொல்கத்தா: ‘இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்,’ என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். பாஜ.வில் இருந்து பிரதமர் மோடியை எதிர்த்து வெளியேறிய முன்னாள் ஒன்றிய பாஜ அமைச்சரான யஸ்வந்த் சின்கா (84), மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். அக்கட்சியில் அவர் தேசிய துணை தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். இதற்காக, கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இந்த தேர்தலில் … Read more

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க ஆக. 10ம் தேதி வரை தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை விவாதிக்க கூடாது,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கடந்த 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதில் மனு தாக்கல் காவிரி ஆணையம், தமிழகம், கர்நாடகா அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு … Read more

மேற்கு வங்கத்தில் உள்ளுர் மின்சார ரெயில்களில் எல்இடி டி.வி.க்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளின் சோர்வை போக்க உள்ளுர் மின்சார ரெயில்களில் எல்இடி டிவிக்களை பொருத்த கிழக்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.  எல்இடி டிவிக்கள் பொருத்தப்பட்ட முதல் உள்ளுர் மின்சார ரெயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டது. மொத்தமுள்ள 50 ரயில்களிலும் 2400 டிவிக்கள் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.  Source link