தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி … Read more

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது: பாஜக சார்பில் முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்காக நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யஷ்வந்த் சின்ஹாபாஜக தலைமையிலான … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: யார் இந்த மார்கரெட் ஆல்வா?

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

புதுடெல்லி: இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் 32 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மசோதாக்கள் மீதும் விவாதம் நடத்த விரும்புவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி.க்கள் மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் … Read more

பள்ளி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். … Read more

க்ரைம் சீரியல் பார்த்து 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த 5 சிறுவர்கள்!!

பிரபல க்ரைம் சீரியல் மூலம் ஈர்க்கப்பட்டு, சிறுவர்கள் சிலர் 7 வயது பள்ளி மாணவரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பணம் ரூ.40,000ஐ தவறவிட்டுள்ளார். இழந்த தொகையை எப்படியாவது திரும்பப் பெற வேண்டும் என சிறுவன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.  நண்பர்கள் பிரபல க்ரைம் தொடரை உதாரணம் காட்டி அதுபோல ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் பெறலாம் என யோசனை தந்தனர். இதனையடுத்து ஜூலை … Read more

அலியா பட்டின் தமிழ் பதிவு

மும்பை: இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்து, சில வருடங்களாக காதலை தொடர்ந்து வந்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் இருவரும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது அலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், மீண்டும் ரன்பீர் கபூர், அலியா பட் ஜோடி சேர்ந்துள்ள பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்த்ரா முதல் பாகம்: சிவா’. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படம் 3 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் … Read more

கேரள தலைமை செயலகத்தில் ஷூட்டிங் நடத்த தடை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபை அமைந்துள்ள தலைமை செயலக வளாகத்தில், இனிமேல் சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று அந்த மாநில அரசு தடைவிதித்து இருக்கிறது. மக்கள் நெருக்கம் அதிகமான பகுதியாக இருப்பதாலும், மக்கள் மற்றும் அரசுப் பணிகள் தடையின்றி நடக்கவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலைமை செயலக வளாகம் உயர் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால்,  தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சுஷ்மிதா மீது எழுத்தாளர் கடும் தாக்கு

மும்பை: நடிகை சுஷ்மிதா சென் (46), பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித் மோடி (56) இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பெங்காலி மொழியில் வெளியிட்டுள்ள பதிவு: சுஷ்மிதா சென்னை கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்தேன். என்னை கட்டிப்பிடித்தார். நான் ஆச்சரியப்பட்டேன். காரணம், இளம் வயதில் 2 பெண் குழந்தைகளை அவர் தத்தெடுத்ததுதான். இதனால் அவர் மீது அதிக மரியாதை ஏற்பட்டது. அவரது நேர்மை, … Read more

நடிகைகளை மட்டும் எளிதில் மாற்றிவிடுகின்றனர்: டாப்சி கோபம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உருவான இந்தி படம், ‘சபாஷ் மிது’. டாப்சி நடிப்பில் வெளியான இதில், ஆண்கள் நிறைந்த கிரிக்கெட் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து சொல்லப்பட்டிருந்தது. மேலும், இப்படத்தில் இடம்பெறும் பாலின பாகுபாடு குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டி வருமாறு: திரையுலகில் பாலின பாகுபாடு மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஹீரோக்களுக்காக வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், ஹீரோயின்களை மட்டும் நினைத்த நேரத்தில் மாற்றிவிடுகின்றனர். நடிகைகள் … Read more