‘‘நான் சேர்ந்தபோது ரூ.40 கோடி, என்னை நீக்கியபோது ரூ.47,680 கோடி” – ஐபிஎல் குறித்து லலித் மோடி
புதுடெல்லி: எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லை எனக் கூறியுள்ளார் நிதி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடி. ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் … Read more