அதிநவீன டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்கள்: டெல்லி அரசு திட்டம்

டெல்லி: டெல்லியில் சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடையவுள்ள நிலையில் பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்க்கு வரும், அதன் பயண நேரம், சேறும் இடம் உட்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசர காலப் பொத்தான், சிசிடிவி கேமரா உட்பட பாதுகாப்பு அம்சங்கள் … Read more

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவிவந்த குரங்கு அம்மை சமீப காலமாக உலகம் முழுவதுமே பரவத்தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரசு அமீரகத்திலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் புனேவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானதாக … Read more

கேரளாவில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு..!!

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. துபாயில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் … Read more

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி மனு -ஜூலை 21ல் உச்சநீதிமன்றம் விசாரணை

வாரணாசியின் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர் விஷ்ணு சங்கரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில மனு தாக்கல் செய்து இருந்த மனுவில், ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு வழக்கமான பூஜை உள்ளிட்டவற்றை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிவலிங்கத்தை கார்பன் முறையில் அதன் பழமையை கண்டறியும் முறைக்கு உட்படுத்த இந்திய அகழாய்வு துறைக்கு உத்தரவிடக் கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்பு – கூடுதல் தகவல்கள்!

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஹர்பஜன் சிங், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திங்கள்கிழமை அன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக ஏறக்குறைய 25 பேருடன் பதவியேற்றுக் கொண்டனர். ராவ் மீனா, விஜய் சாய் ரெட்டி, கீரு மஹ்தோ, ஷம்பலா சரண் படேல், ரஞ்சீத் ரஞ்சன், மகாராஷ்டிரா மாஜி, ஆதித்ய பிரசாத், பிரஃபுல் படேல், இம்ரான் பிரதாப்கர்ஹி, சஞ்சய் ராவத், சஸ்மித் பத்ரா, … Read more

எதிர்க்கட்சிகள் அமளி: மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் விலைவாசி உயர்வு குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. Source link

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு..!!

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டது.

”தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு…” என கெத்து காட்டும் கேரளத்து மீசைக்காரி!

ஆண்களுக்கான கம்பீர தோற்றம் என்றாலே மீசைதான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னாலும் மீசை முறுக்கி வீரமாக உலாவ முடியும் என்பதை இந்த உலகுக்கு எடுத்துரைத்திருக்கிறார். ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்களுக்கு மீசை வளரும். ஆனால் புருவத்தை தீட்டுவது போலவே உதட்டிற்கு மேல் வளரும் மீசை முடியை அகற்றுவதில் கவனமாக இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வளர்ந்திருக்கும் மீசையை அகற்றாமல் அது இருப்பதை பெருமையாகவே … Read more

'நான் குற்றவாளி அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்' – அரவிந்த் கெஜ்ரிவால் ஆதங்கம்!

தான் குற்றவாளி அல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் நாட்டில் இம்மாத இறுதியில், உலக நகரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, … Read more

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்..!!

டெல்லி: ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு தொடர்பாக அதிமுக சார்பிலும்  தனியாக மற்றொரு கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தன்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.