பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்: உ.பி. நீதிமன்றங்கள், காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்..!!

டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்திரப்பிரதேச நீதிமன்றங்கள், காவல்துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒரே விவகாரத்தில் வெவ்வேறு இடங்களில் பல முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது ஜுபைர் கைது விவகாரத்தில் இந்த ஆபத்தான சுழற்சி கவலை அளிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

சேலம் முழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை அமலாக்குக: மக்களவையில் திமுக எம்.பி பார்த்திபன் கோரிக்கை

புதுடெல்லி: சேலம் மாவட்டம் முழுவதிலும் இ.எஸ்.ஐ திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று சேலம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் திங்கள்கிழமை கேரிக்கை எழுப்பினார். இது குறித்த கோரிக்கையை திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் விதி எண் 377 -ன் கீழ் விடுத்ததில் பேசியதாவது: “சேலம் உருக்கு ஆலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரை இஎஸ்ஐ வசதி கிடைக்கவில்லை. பலமுறை எஸ்.எஸ்.பி அலுவலகத்திலும் ஒப்பந்தக்காரர் … Read more

இஸ்ரேல் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அலுமினியம் ஏர் பேட்டரிகள் உற்பத்தி..!

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹின்டல்கோ நிறுவனம், இஸ்ரேலின் பினர்ஜி, ஐ.ஓ.பி. நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அலுமினியம் ஏர் பேட்டரிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பேட்டரிகளுக்கான அலுமினிய தகடுகளை உற்பத்தி செய்யவும், பேட்டரிகளில் பயன்படுத்தப்பட்ட அலுமினியத்தை மறுசுழற்சி செய்யவும் அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆக்ஸிஜனுடன் சுற்றுப்புற காற்றில் அலுமினியம் வினைபுரியும் போது உருவாகும் அலுமினியம் ஹைட்ராக்சைட் மூலம் அலுமினியம் – ஏர் பேட்டரிகள் ஆற்றலை உற்பத்தி செய்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த எடை போன்ற … Read more

ஆடி மாத பூஜை எதிரொலி சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் காலை முதல் வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. சாதாரணமாக மாத பூஜைகள் நடைபெறும் போது சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்தைவிட சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.நேற்று ஆடி மாதம் முதல்நாள் என்பதால் அதிகாலை முதலே தரிசனத்திற்காக பக்தர்கள் … Read more

“பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இல்லை” – மத்திய இணையமைச்சர் பதில்

புதுடெல்லி: பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிகுமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், திமுக எம்.பியுமான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ‘பென்சில், ரப்பர், பேனா, நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சார்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு திட்டம் ஏதேனும் இருக்கிறதா? … Read more

வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் ‘லிவிங் டூகெதர்’ இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை: சடலத்தை வீசி எரிந்த காதலன் உட்பட 3 பேர் கைது

புதுடெல்லி: வாடகை வீட்டில் ‘லிவிங் டூகெதர்’ ஆக வாழ்ந்த இளம்பெண்ணை, அவரது காதலன் கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தலைநகர் டெல்லியின் கோவிந்தபுரியை சேர்ந்த ஜூலேகா என்பவரும், ஓம்பிரகாஷ் என்பவரும் திருமணம் செய்து கொள்ளாமல்  (லிவிங் டூகெதர்) ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்  ஓம்பிரகாஷுக்கும், ஜூலேகாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அதாவது பக்கத்து வீட்டுப்  பெண்ணுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.இதனால்  … Read more

’’உள்ளாடையை கழற்றச் சொன்னார்கள்’ – கண்ணீர்விட்ட நீட் மாணவிகள்.. கேரளாவில் நிகழ்ந்த கொடூரம்

(கோப்பு புகைப்படம்) கேரளாவில் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்றச்சொன்னதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஒருவர் அளித்த புகாரில்பேரில் நீட் மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று (ஜூலை17) நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கேரளாவில் சில மாணவிகள் மோசமான அனுபவங்களை சந்திருக்கின்றனர். நீட் தேர்வு விதிமுறைகளின்படி மெட்டல் பொருட்களை தேர்வறைக்குள் எடுத்துச்செல்லக்கூடாது. இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரிலுள்ள மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப நிறுவன மையத்திற்கு தேர்வு எழுதச்சென்ற ஒரு மாணவியை பரிசோதித்தபோது … Read more

ஆடி மாத பிறப்பையொட்டி திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் யானையூட்டு விழா கோலாகலம்: 63 வளர்ப்பு யானைகள் பங்கேற்பு

பாலக்காடு: கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டையம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் வளர்ப்பு யானைகள் சுமார் 400 உள்ளன. பெரும்பாலும் இங்கு ஆண் யானைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்கள். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் உற்சவம் மூர்த்தியின் திடம்பு ஏந்தி விழாவில் கலந்து கொள்ளும். தற்போது மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வரவுள்ள நிலையில் யானைகளுக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. மேலும் யானைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச் சத்தான உணவுகள் மற்றும் சிகிச்சை … Read more

"ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு உக்ரைன்-ரஷ்யா போரே காரணம்" – நிதியமைச்சர் நிர்மலா விளக்கம்!

கடந்த வாரம் வியாழன் அன்று வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என்ற அளவில் சரிந்து வணிகமானது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் பற்றி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் – ரஷ்யா … Read more

ஹஜ் பயணம் சென்று திரும்பிய முஸ்லிம்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற காஷ்மீர் பண்டிட்டுகள்

ஸ்ரீநகர்: ஹஜ் புனித பயணம் சென்று காஷ்மீர் திரும்பிய முதல் பகுதி இஸ்லாமியர்களுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். காஷ்மீரில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவரும் பராம்பரிய பழக்கங்களுள் ஒன்று, ஹஜ் புனித பயணம் சென்று திரும்பும் புனித பயணிகளுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளிப்பது. இணைந்து வாழ்வதையும் சகோதரத்துவத்தையும் காக்கும் வகையில் பின்பற்றப்படும் இந்த பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்தாண்டு ஹஜ் புனித பயணம் சென்று … Read more