ஆடி மாத பிறப்பையொட்டி திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் யானையூட்டு விழா கோலாகலம்: 63 வளர்ப்பு யானைகள் பங்கேற்பு

பாலக்காடு: கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டையம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் வளர்ப்பு யானைகள் சுமார் 400 உள்ளன. பெரும்பாலும் இங்கு ஆண் யானைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்கள். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் உற்சவம் மூர்த்தியின் திடம்பு ஏந்தி விழாவில் கலந்து கொள்ளும். தற்போது மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வரவுள்ள நிலையில் யானைகளுக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. மேலும் யானைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச் சத்தான உணவுகள் மற்றும் சிகிச்சை … Read more

"ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு உக்ரைன்-ரஷ்யா போரே காரணம்" – நிதியமைச்சர் நிர்மலா விளக்கம்!

கடந்த வாரம் வியாழன் அன்று வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என்ற அளவில் சரிந்து வணிகமானது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் பற்றி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் – ரஷ்யா … Read more

ஹஜ் பயணம் சென்று திரும்பிய முஸ்லிம்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற காஷ்மீர் பண்டிட்டுகள்

ஸ்ரீநகர்: ஹஜ் புனித பயணம் சென்று காஷ்மீர் திரும்பிய முதல் பகுதி இஸ்லாமியர்களுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். காஷ்மீரில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவரும் பராம்பரிய பழக்கங்களுள் ஒன்று, ஹஜ் புனித பயணம் சென்று திரும்பும் புனித பயணிகளுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளிப்பது. இணைந்து வாழ்வதையும் சகோதரத்துவத்தையும் காக்கும் வகையில் பின்பற்றப்படும் இந்த பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்தாண்டு ஹஜ் புனித பயணம் சென்று … Read more

லாட்டரியில் கிடைக்கப்போகும் 10 கோடி – யார் அந்த அதிர்ஷ்டசாலி ?

கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரியின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதற்கான டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. MA 235610 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.10 கோடியும், இரண்டாம் பரிசாக (ரூ.50 லட்சம்) MG 456064 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கும் கிடைத்தது. எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. அங்கமாலியில் உள்ள சஹாயி லாட்டே ஏஜென்சியில் டிக்கெட்டை வாங்கிய நெடும்பாசேரியில் உள்ள ஏஜென்ட் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. வெற்றியாளர் இன்னும் … Read more

தந்தையின் கையில் இருந்து தவறிய 4 மாத குழந்தையை கீழே போட்டு கொன்ற குரங்கு: மொட்டை மாடியில் நடந்த சோகம்

பரேலி: உத்தரபிரதேசத்தில் மூன்றாவது மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து நான்கு மாத குழந்தையை குரங்கு ஒன்று கீழே போட்டு கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள துங்கா கிராமத்தை சேர்ந்த இந்திக் உபாத்யாய் மற்றும்  அவரது மனைவி ஆகியோர் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியின் மொட்டை மாடியில் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது இந்திக் உபாத்யாயின் கையில் தங்களது 4 மாத ஆண் குழந்தை நிஷிக் இருந்தது. திடீரென அவர்களது … Read more

முகமது ஜுபைர் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

உத்தரப்பிரதேசத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட 6 எப்.ஐ.ஆர்.களை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளப் பதிவுகளை செய்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினரால் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் சமீபமாக அவர் கைது செய்யப்பட்டு வருகிறார்.  இந்நிலையில் உத்தரப்  பிரதேச மாநிலம் ஹாத்ராஸ், ஜாஜியாபாத், முசாபர்நகர், … Read more

நாடு முழுவதும் நடைபெற்ற 16வது குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவு.: தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி தகவல் தெரிவித்துள்ளார். நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இன்று காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மின்னணு … Read more

எல்லா அரிசிக்கும் ஜிஎஸ்டி கிடையாது; இதற்கு மட்டும்தான்! மத்திய அரசு விளக்கம்!

வணிகப்பெயர் இல்லாத (பிராண்ட் அல்லாத) 25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வரி உயர்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது வணிகப்பெயர் இல்லாத (பிராண்ட் அல்லாத) 25 கிலோ எடை வரையில் மூட்டையில் அடைக்கப்பட்ட தானியங்களுக்கு மட்டுமே 5 சதவிகித ஜிஎஸ்டி … Read more

முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 6 வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவசர மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் தாக்கல் செய்திருந்தார். முகமது ஜுபைர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி … Read more

president election: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ!

நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்யிடுகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களும், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலோ, தலைமைச் செயலக வளாகத்திலோ மாநில எம்எல்ஏக்களும் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம், பாஜக வேட்பாளரான திரெளபதி முர்மு … Read more