பாஜக மாஸ்டர் ப்ளான்..! – மேற்கு வங்க ஆளுநர் ஆகிறார் முக்தார் அப்பாஸ் நக்வி?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக வேட்பாளராக, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாத தொடக்கத்தில் முடிவடைகிறது. இதை அடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு, … Read more

நாடு முழுவதும் கொரோனாவால் மேலும் 20,528 பேர் பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 20 ஆயிரத்து 528 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்த 49 பேர் உயிரிழந்ததுடன், 17 ஆயிரத்து 790 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  Source link

பரப்பரபான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: 24 மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்

டெல்லி: பரப்பரபான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அக்னிபாதை திட்டம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு நிலை பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபடுவோர்களின் வீடுகள் இடிக்கபடுவது, அக்னி பாத் திட்டம் உள்ளிட்ட 15 … Read more

புல்லட் பைக்குக்கு கோவில் கட்டிய கிராமத்தினர்.. எங்கு தெரியுமா? – சுவாரஸ்ய பின்னணி!

வழிபாட்டு தலங்களுக்கு பிரசித்தி பெற்ற நாடு இந்தியா. பன்முகத் தன்மைக்கு பெயர் பெற்ற நம் நாட்டில் பல விசித்திரமான, விநோதமான இடங்களும், தலங்களுமே நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், குஷ்புவுக்கு, அமிதாப் பச்சனுக்கு, பிரதமர் மோடிக்கு கூட கோவில் கட்டப்பட்டுள்ளது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் புல்லட் பைக் ஒன்றை கடவுளாகவே 30 ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படிப்பட்ட கோவிலை பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். புல்லட் பைக் என்றாலே இளைஞர்களிடையே ஒரு … Read more

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – பாகிஸ்தானில் தரையிறக்கம்!

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நடுவழியில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதை தெரிந்து கொண்ட விமானி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதன் பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கம் … Read more

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத், உஸ்மனாபாத் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல்

மும்பை: மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தின் பெயர் சத்ரபதி சாம்பாஜி நகர் என்றும், உஸ்மனாபாத்தின் பெயர் தாராஷிவ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். இன்னும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, அவுரங்காபாத்துக்கு சாம்பாஜி நகர் என்றும் உஸ்மனாபாத்துக்கு … Read more

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம் – என்ன காரணம்?

இந்தியாவின் இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் இருந்து தெலங்கான தலைநகர் ஹைதராபாத்துக்கு 130 பயணிகளுடன் இன்று காலை இண்டிகோ 6E-1406 விமானம் வந்துக் கொண்டிருந்தது. இதில் பாகிஸ்தான் எல்லையை நெருங்கும் போது விமானம் தொடர்ந்து பறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி உணர்ந்தார். உடனடியாக இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், பாகிஸ்தானில் விமானத்தை தரையிறக்க அந்நாட்டு … Read more

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்!

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்ததை அடுத்து விமானம் உடனடியாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அதற்கு பதிலாக மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு முறை இந்திய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது.  Source link

கேரளாவில் யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் பூஜையுடன் தொடக்கம்:பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் வருகை

திருச்சூர்: கேரளாவில் கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் பூஜையுடன் துவங்கியுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதன் சிவன் கோவிலில் 40- வதுஆண்டாக கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இங்கு வரக்கூடிய யானைகள் அனைத்தும் பல்வேறு கோவில்களில் உள்ள வளர்ப்பு யானைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான யானைகளும் இங்கு வருகின்றன.இந்த ஆண்டின் சிறப்பானது ஆசியாவிலேயே மிக பெரிய யானையான செத்திக்கோட்டு ராமச்சந்திரன் கலந்து கொண்டுள்ளது. தற்போது வடக்கு நாதன் … Read more

பெண் குழந்தைக்காக பெண்ணுக்கு ஆசிட் கொடுத்த பெண்.. கணவருக்கு காப்பு.. அசாமில் பயங்கரம்!

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் நடந்தேறி வருகிறது. அதுவும் பெண் குழந்தை வேண்டி பெண்களையே கொடுமைப்படுத்தும் கோர சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையிலேயே இருக்கும். அவ்வகையில், அசாம் மாநிலத்தில் பெண் ஒருவரை அவரது கணவரும், கணவரின் பெற்றோரும் பெண் குழந்தைக்காக அமிலம் கொடுத்திருக்கிறார்கள். கரிம்காஞ்ச் மாவட்டத்தின் ரதாபரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஹிரப்நகர் அருகேதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி கணவர் மற்றும் அவரது பெற்றோரால் அமிலம் கொடுக்கப்பட்ட சும்னா பேகம் … Read more