கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த கார்.. காருடன் தத்தளித்த ஓட்டுநர் பத்திரமாக மீட்பு..!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த காரை, அதன் ஓட்டுநருடன் அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து வந்த வாடகை கார் ஒன்று, பெல்காம் அருகே வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு திரும்பியது. சிக்கோடி என்ற பகுதியை கார் கடந்த போது எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து துத்கங்கா ஆற்றில் விழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மீட்பு நடவடிக்கையை தொடங்கியபோது, அதன் ஓட்டுநர் காரின் மேல் அமர்ந்து கொண்டார். பின்னர், காரின் … Read more

30% ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால் ஆந்திராவில் 400 தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள் அதிரடி முடிவு

திருமலை: ஆந்திராவில் தியேட்டர்களுக்கு 30 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால், உடனடி யாக 400 தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள்  மூடிவிட்டனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என்று, நகரவாரியாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையைக் குறைத்தது. பிறகு அதை ஏ, பி, சி என்று தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்தது. இதனால் வசூல் தொகை பெருமளவில் குறைந்ததால், தியேட்டர்களை … Read more

நாட்டின் முதல் குடிமகனால் என்ன செய்ய முடியும்… பாய்ந்தால் புலி

நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது. ஜனநாயகமும், அரசியலமைப்பும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், அவற்றை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்புடைய நாட்டின் முதல் குடிமகனுக்கு, என்ன மாதிரியான அதிகாரங்கள் உள்ளன, அத்தகைய அதிகாரங்களை முந்தைய ஜனாதிபதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தி உள்ளனர் என்பதைப் பற்றி பார்ப்போம்… உலகின் பிற நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் ஜனாதிபதி பதவி மிகவும் வித்தியாசமானது. அவர்களுக்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை பயன்படுத்த முடியாது. சுருக்கமாக … Read more

HDFC வங்கியில் காலாண்டு நிகர லாபம் 20.91% அதிகரிப்பு.. எத்தனை கோடிகள் தெரியுமா?

இந்தியாவில் முன்னணியில் உள்ள தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரூ. 9,579 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய 7,729 கோடி ரூபாயை விட தற்போது 20.91 சதவிகிதம் லாபம் அதிகரித்துள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி தெரிவித்துள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் காலாண்டில் நிகர லாபம் ரூ. 10,055.18 கோடியிலிருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வங்கியின் வாராக்கடன் 1.47 சதவிகிதத்தில் இருந்து … Read more

அம்மா ஆகிறார் கத்ரினா?

மும்பை: சமீபகாலமாக பாலிவுட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பதை தொடர்ந்து, நடிகை கத்ரினா கைப் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளது. நேற்று அவரது 39வது பிறந்தநாள். இதையொட்டி மும்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கத்ரினா கைப் கர்ப்பமாக இருப்பது உறுதி. அவரும், நடிகர் விக்கி கவுசலும் தங்கள் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த தகவலை கத்ரினா கைப் தன் பிறந்தநாளில் ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்வார் என்று தெரிகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் … Read more

பிஞ்சு மனதில் படர்ந்த வஞ்சம்! 7 மாதங்கள் காத்திருந்து பழிவாங்கிய டெல்லி சிறுவன்!

தந்தையை அடித்த நபரை 7 மாதங்கள் குறிவைத்து பார்த்திருந்த சிறுவன், தனது நண்பர்களை சேர்த்துக்கொண்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் H – 4 ப்ளாக் பகுதியில் அமர்ந்திருந்த போது துப்பாக்கியால் சுட்டதில் முகத்தில் பலத்த காயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள ஜஹன்கிர்புரி பகுதியில் ஜூலை 15ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு … Read more

இந்த ஆண்டு முதல் மக்களுக்கு தொலைத்தொடர்பு சட்ட சேவை இலவசம் – மத்திய சட்டத்துறை கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டு முதல், தொலைத்தொடர்பு சட்ட சேவை (Tele-Law service), மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு விளிம்புநிலை … Read more

இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து: பிரதமர் மோடி

புந்தேல்கண்ட்: உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29ந்தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கி.மீ. நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள NH-35ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா, மஹோபா, … Read more

”இந்தியாவை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்கணும்” – பிரதமருக்கு முன்னாள் காங். பிரமுகர் கடிதம்!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான ஆசிஷ் தேஷ்முக், நீண்ட காலமாக விதர்பா தனிமாநில கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சராசரியாக 4 கோடியே 90 லட்சம் மக்கள் வசிக்கும் வகையில் நாட்டை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அனைத்து பகுதிகளின் … Read more

2024-25ல் ரூ.1 லட்சம் கோடிக்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு இலக்கு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

பேர்ட்பிளேர்: 2024-25-ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அந்தமான் சென்றுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அந்தமான் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, மீன்வளம், சுற்றுலா, எளிதில் தொழில் மேற்கொள்வதற்கான அரசின் வழிமுறைகள், அதற்கான அனுமதி … Read more