நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் முன் அனுமதியின்றி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கத் தடை..!

நாடாளுமன்றத்துக்குள் அறிவிப்பு பலகைகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேள்வித்தாள்கள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள் உள்ளிட்டவைகளை சபாநாயகரின் முன் அனுமதியின்றி விநியோகிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Source link

'வார்த்தை தடை' சர்ச்சையை தொடர்ந்து அடுத்த அதிரடி.. நாடாளுமன்றத்தில் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்களுக்கு தடை!!

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என மிகப்பெரிய பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேச்சு; பலன் தருமா கேசிஆர் வியூகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் பேசி பாஜகவுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுப்பது பற்றி ஆலோசித்துள்ளார் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஞ்சிபுரம் பக்தர் நெரிசலில் சிக்கி பலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர், வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், முகலிவாக்கம், வேளாங்கண்ணி நகரை  சேர்ந்தவர் வேதாச்சலம் (64). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக  திருமலைக்கு வந்தார். இரவு 9.45 மணிக்கு வேதாச்சலம் எஸ்.எம்.சி. சந்திப்பு  அருகே வரிசையில் இருந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில்    திடீரென மயங்கி விழுந்தார்.பின்னர் அவர் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். … Read more

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது – யுஜிசி திட்டவட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத் தேர்வில் (சியுஇடி) பங்கேற்காதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை நடத்தும் முறை, நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நடைமுறையை மத்திய அரசு … Read more

டிஜிட்டல் செய்திகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் அனைத்தும் முதலில் பதிவு செய்ய வேண்டும். மசோதா அமலுக்கு வந்த 90 நாட்களுக்குள் அனைத்து டிஜிட்டல் ஊடகங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தற்போது டிஜிட்டல் மூலமான செய்திகளுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஊடகம் சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், அச்சு மற்றும் இதழியல் … Read more

நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,044 பேருக்கு கொரோனாதொற்று உறுதி

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 20,044 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,30,071 ஆக உயர்ந்தது.* புதிதாக 56 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – செல்போனில் படம்பிடித்த மனைவி

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞரையும், அதனை செல்போனில் படம்பிடித்த மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி குமார் (27). இவருக்கு சவீதா (24) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ரிஷி குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்கு சிறுமி பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் ரிஷி குமார் அவருக்கு தொல்லை தருவதை விடவில்லை. … Read more

மகாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ஒப்புதல்

மும்பை: புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதற்கான 16 காரணங்களை பட்டியலிட்டு தேசிய விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) மாநில தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 431 ஹெக்டேர் நிலம் தேவை. இதில் 71 சதவீத நிலம்தான் இதுவரை இத்திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பொறுப்பேற்ற மாநில … Read more

லடாக் எல்லை மோதல்: இந்திய – சீன ராணுவம் நாளை 16ம் சுற்று பேச்சு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு ஜூன்  15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன ராணுவ வீரர்கள்  முயன்றனர். அதை தடுத்தபோது ஏற்பட்ட பயங்கர மோதலில்  20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. பதற்றத்தைக் குறைக்க, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இதுவரை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தை நடந்து உள்ளன. இதனால் இருதரப்பிலும் எல்லையில்  … Read more