சர்ச்சை வார்த்தைகளை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள்நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என மிகப்பெரிய பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய தடையை மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை … Read more