‘‘நிதிஷ் குமாருக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை’’-  யஷ்வந்த் சின்கா ஆதங்கம்

பாட்னா: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளார். அவா் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறார். பாட்னாவில் ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினர். அப்போது குமாருடன் பலமுறை பேச முயற்சித்ததாகவும், ஆனால் பிஹார் முதல்வர் தனது … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்கவுள்ள நிலையில் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டது. அதில், ‘வாய்ஜாலம் காட்டுபவர், சின்னஞ்சிறு புத்திக்காரர், கொரோனா பரப்புவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு முறைகேடு,  நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி,  கோழை, கிரிமினல், முதலை கண்ணீர்  உள்பட பல … Read more

பொது இடத்தில் தொழுகை ஏன்?.. லக்னோ லுலு மாலுக்கு எதிராக இந்து மகாசபா புகார்!

லக்னோ லுலு மாலில் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ ஒன்றையும் அகில பாரத இந்து மகாசபா வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லுலு மாலில் சிலர் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இதையடுத்து பொது இடத்தில் தொழுகை நடத்துவதா என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்துத்துவ அமைப்பினர், இந்த மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரத் இந்து மகாசபா அமைப்பு வலியுறுத்தியது. … Read more

ஐ2யு2 குழுவின் முதல் உச்சி மாநாடு; இந்திய உணவுப் பூங்கா திட்டத்தில் முதலீடு.! அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆர்வம்

புதுடெல்லி: இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையில் உணவு பூங்காக்கள், சூரிய சக்தி உற்பத்திக்கு அதிகளவு நிதி ஒதுக்க அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐ2யு2 குழுவின் முதல் உச்சி மாநாடு காணொலி மூலம் நடந்தது. பிரதமர் மோடியுடன், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அமெரிக்க அதிபர் … Read more

பிரதமர் மோடியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்?

பிரதமர் நரேந்திர மோடியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதாக உளவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உளவுப் பிரிவினர் தனது விசாரணையை துவங்கினர். கடந்த 12ஆம் தேதி பீகாருக்கு மோடி சென்ற இருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீஃப் என்ற இடத்தில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை தாக்க பயங்கரவாதிகள் 6 & 7 தேதிகளில் சதித்திட்டம் தீட்டியதாக 11ம் தேதி சோதனை நடத்திய போலீசார் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை என திருமலை தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் வேதாச்சலம் உயிரிழந்தது குறித்து  திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. தரிசனத்துக்காக வரிசைக்கு வருவதற்கு முன்பே கழிவறைக்கு சென்றபோது கால் தவறி வேதாச்சலம் கீழே விழுந்து மயங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர் வேதாச்சலம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி 199.44 கோடியை தாண்டியது; இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர்.! அடுத்த 75 நாட்களுக்கு மட்டும் ஏற்பாடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இன்று முதல் 75 நாட்களுக்கு போடப்படுகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இதுவரை 199.44 கோடிக்கும் (1,99,44,72,253) அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,32,789) தடுப்பூசிகள் போடப்பட்டன. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் … Read more

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார் சோனியா காந்தி..!!

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.

’பள்ளிக்குழந்தைகள் வருகிறார்கள்; வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வரமாட்டிங்களா?’ – நீதிபதி

பள்ளிக் குழந்தைகள் காலை 7 மணிக்கே பள்ளிக்குச் செல்லும்போது, நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா? என உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இதில் மதியம் 1 மணி முதல் 2 வரை உணவு இடைவேளை வேறு. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான யு.யு லலித், ரவீந்திர பட், சுதன்சு துலியா … Read more

Presidential Election: 60 சதவீத வாக்குகளுடன் ஜனாதிபதி ஆகிறார் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18 ஆம் தேதி நடைபெற … Read more