சுஷ்மிதா சென்னுடன் 56 வயது லலித் மோடி டேட்டிங்.. அதிர்ச்சியில் திரையுலகம் !!

இந்தியாவில் லலித் மோடியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில் பிரபலமான ஐபிஎல் தொடரை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவாரக இருந்தவர்களில் இவரும் உண்டு. அப்போது ஐபிஎல் நிர்வாக தலைவராகவும் லலித் மோடி இருந்தார்.  இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் இவர் டேட்டிங் செய்வதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகிவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட லலித் மோடியுடன் சுஷ்மிதா … Read more

உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் நாடுகள்: 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்தது இந்தியா

உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் நாடுகளுக்கு 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது இந்திய அரசு, முன்னதாக கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது. ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ரஷ்ய கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலவும் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ஏற்பட்ட அதிக வெப்பநிலை காரணமாக … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்துள்ளார். நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்க, தேவஸ்தான அதிகாரிகள் வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரும் மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளது. இத்தேர்வை ஒட்டிய நாட்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வும் நடப்பதால், ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “கரோனா பாதிப்புக்கு இடையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் … Read more

குமரி முதல் காஷ்மீர் வரை 3500 கி.மீ. பாதயாத்திரை.. ராகுல் காந்தி தலைமையில் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டம்.!

பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் 148 நாட்களில் 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமைக்கான பாத யாத்திரை தேதி மாற்றப்பட்டு முன்கூட்டியே நடைபெறலாம் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தியே கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. … Read more

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 1,13,000 கனஅடியாக உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 1,13,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.  கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1,03,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

பிஎஃப்ஐ-யும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றா? காவல் உயரதிகாரி கருத்தால் சர்ச்சை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவையும் (பிஎஃப்ஐ), ஆர்எஸ்எஸ் அமைப்பையும் ஒப்பிட்டு காவல் உயரதிகாரி கருத்து தெரிவித்தது பிகாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். இதனை முன்னிட்டு அங்கு போலீஸார் சென்ற வாரம் தீவிர வாகனச் சோதனையிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கும், பிஃஎப்ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. … Read more

விவாகரத்து செய்த காஸ்ட்யூம் டிசைனரை காதல் திருமணம் செய்யும் வில்லன்

மும்பை: பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் தற்காப்புக்கலை பயின்றவர் மட்டுமின்றி மாடலாகவும் இருக்கிறார். தமிழில் அஜித் குமாருடன் ‘பில்லா 2’,  விஜய்யுடன் ‘துப்பாக்கி’, சூர்யாவுடன் ‘அஞ்சான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், வித்யூத் ஜம்வாலுக்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கும், பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் நந்திதா மஹ்தானிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில் வித்யூத் ஜம்வால், நந்திதா மஹ்தானி ஜோடி தாஜ்மகாலுக்கு சென்றிருந்த போட்டோ … Read more

மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் சம்பளம்: நீது சந்திரா அதிர்ச்சி தகவல்

மும்பை: தெலுங்கில் ‘விஷ்ணு’ என்ற படத்தில் அறிமுகமானவர், நீது சந்திரா. பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். போஜ்புரி, கன்னடம், கிரிக், ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் அவர், தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதி-பகவன்’, ‘சேட்டை’, ‘சிங்கம் 3’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு வெற்றிகரமான கதா நாயகியின் தோல்விக்கதையே எனது கதை. தேசிய விருது … Read more

மூக்கில் ஸ்பிரே செய்யப்படும் கரோனா மருந்தால் உடனடி பலன்: மும்பை நிறுவன ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூக்கில்ஸ்பிரே செய்யப்படும் நைட்ரிக்ஆக்சைடு மருந்தை, மும்பையைச் சேர்ந்த கிளன்மார்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 20 இடங்களில் கரோனா அறிகுறி உள்ள தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாத 306 பேரிடம் இந்த மருந்து 3 கட்டமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதிக அபாயம் உள்ள கரோனா நோயாளிகளிடம் மூக்கில் ஸ்பிரே மருந்து செலுத்திய 24 மணிநேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 94 சதவீதம் குறைந்தது. 48 மணி … Read more