கர்ப்பிணியை காப்பாற்ற முயன்றவர்களுக்கு நேர்ந்த துயரம் -வெள்ளத்தில் சிக்கிய இருவர் பலி

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக வெளியே மீட்டு வர முயன்ற இரு இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more

அந்தமான் மீனவர்களுக்கு விரைவில் குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்பு வசதிகள்: எல்.முருகன் தகவல்

போர்ட் பிளேர்: அந்தமான் தீவு மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை விரைவில் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமான் தீவுகளுக்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் பயணத்தின் முதல் நாளான வியாழக்கிழமை ( ஜூலை 14) ரங்கத் வளைகுடா பகுதியிலுள்ள மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்குள்ள … Read more

சமாதி நிலையில் இருந்த நித்யானந்தா சமூக வலைதளங்களில் திடீர் பேச்சு

புதுடெல்லி: சமாதி நிலையில் இருப்பதாக அறிவித்திருந்த நித்யானந்தா திடீரென தோன்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, பெங்களூரில் இருந்து தப்பிச் சென்று, இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு உரை ஆற்றி வந்த அவர் கடந்த 3 மாதங்களாக நேரில் தோன்றவில்லை. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த … Read more

ஒரே குத்தில் கோமா – சுருண்டு விழுந்த குத்துச்சண்டை வீரர் பரிதாப மரணம்! பகீர் வீடியோ!

பெங்களூரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் முகத்தில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் மைசூரை சேர்ந்த நிகில் என்ற 23 வயது வீரர் கலந்துகொண்டார். நிகிலும் மற்றொரு வீரரும் மோதியபோது, நிகிலின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார் எதிர் வீரர். இதனால் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு விழுந்தார். … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் எதிரொலி; நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு.!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய நிறுவனத்துக்கு கொடுத்த கடனுக்காக இந்த பங்கு பரிமாற்றம் நடந்தது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13, 14, … Read more

பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்; எதிர்கட்சிகள் கொந்தளிப்பு-மக்களவை சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்கட்சிகள் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், இது வழக்கமான நாடாளுமன்ற அலுவல் பணி தான் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 18-ம் தேதி முதல் துவங்குகிறது. இதனை முன்னிட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும்  பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ‘பாலியல் துன்புறுத்தல்’, ‘வெட்கம்’, ‘துஷ்பிரயோகம்’, ‘துரோகம்’, … Read more

குரங்கு அம்மை பாதிப்பு: அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா: குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் “50 நாடுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி … Read more

நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது – டெல்லி நீதிமன்றம் அதிரடி…

நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி அனுபா ஸ்ரீவாஸ்தா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருவதாகவும் அதனால் ஜூலை17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இத்தேர்வை மீண்டும் நடத்தவும் குறுப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையினலான அமர்வு முன் வழக்கறிஞர் மம்தா … Read more

ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி: கேரளாவுக்கு விரைகிறது ஒன்றிய குழு

கேரள: கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்துக்கு சுகாதாரத்துறை ஒன்றிய குழு விரைந்து செல்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டது. 

நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வினை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். ஜூலை 17ம் தேதி அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில்  உத்தரப் பிரதேசம்,கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, பீகார், ஹரியானா இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மாணவர்களால் … Read more