திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி: மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் அன்சாரி (35). ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா பரவலைத் தொடர்ந்து பரோலில் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு சிறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் சுபாஷ் அன்சாரியை … Read more