2 மாநிலங்கள், 3 ஆன்மிக தலங்களை இணைக்கும் புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இணைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக் கூடிய தரங்கா ஹில் அம்பாஜி அபுசாலை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ரூ.2798.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள தரங்கா இந்த புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 116.65 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படவுள்ள இந்த புதிய ரயில் பாதை பணிகள் 2026 – … Read more

கொரோனா பூஸ்டர் டோஸ்: 75 நாட்களுக்கு இலவசம் – மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும். எனவே, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் … Read more

ம.பியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை முழுங்கியதாக முதலைக்கு டாா்ச்சா் கொடுத்த மக்கள்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியோபூா் என்ற இடத்தில் சம்பல் ஆற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் குளித்துள்ளான். அப்போது அங்கு வந்த முதலை சிறுவனை ஆற்றுக்குள் இழுத்து சென்று விழுங்கி உள்ளது. இதை பாா்த்த கிராம மக்கள் வலை, கம்பு ஆகியவற்றின் உதவியுடன் முதலையை பிடித்து ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனா். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாாிகள் முதலையை எடுத்து … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கோவிட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி … Read more

தேசிய சின்னம் சர்ச்சை: பின்னணி என்ன?

இந்திய தேசிய சின்னம் சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சாரநாத்தில் அமைந்துள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் … Read more

டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 46 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் – தம்பதியர் கைது..!

வியட்நாமில் இருந்து டெல்லிக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கைத்துப்பாக்கிகளை கடத்தி வந்த தம்பதியர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மீண்டும் பிடிபட்டனர். டெல்லி இந்திரகாந்தி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும்போது, ஜக்ஜித் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் ஆகியோரின் பைக்குள் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கிகள் சிக்கின.   Source link

கனமழை காரணமாக வட இந்தியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு: சுற்றுலா நகரமான மணாலியில் போக்குவரத்து பாதிப்பு

சிம்லா: கனமழை காரணமாக சுற்றுலா நகரமான மணாலியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது. இமாச்சல பிரதேசம், குஜராத்,மகாராஸ்டிரா,அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பல்வேறு நகரங்கள் தத்தளிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் மணாலி நகரில் நடுவில் ஓடும் பஜோகி நீர் வழித்தடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவின சொகுசு பேருந்துகள் சேதமடைந்துள்ளன. மணாலி நகரின் மிக முக்கியமான சாலைகள் மழை வெள்ளத்தில் … Read more

national emblem controversy: சிங்கம் போன்றவர் மோடி… எதிர்க்கட்சிகளை கடுப்பேத்தும் பாஜக!

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள 9,500 கிலோ எடை கொண்ட வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைத்தார். இந்த தேசிய சின்னம் குறித்த சர்ச்சை தற்போது அரசியல் கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனையாளும், திராவிட இயக்க ஆதரவாளருமான சூர்யா சேவியர் ட்விட்டரில் விமர்சித்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். ‘இது சிங்கமல்ல;அசிங்கம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

சுப்ரீம்கோர்ட்டில் தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளதால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை அமைச்சர்களாக நியமிக்க கூடாது: ஆளுநருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்று ஆளுநருக்கு உத்தவ் தாக்கரே சார்பில் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்நிலையில் ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும், ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராகவும் சிவசேனா … Read more

குஜராத்தில் கனமழை – 7 பேர் பலியான சோகம்!

கடந்த இரண்டு நாட்களாக குஜராத் முழுவதிலும் பெரும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் நகரங்கள் முழுதும் பெரும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஞாயிற்று கிழமை குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில் 219 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் பல்வேறு குடியிறுப்புகளும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் ஏற்ப்பட்ட இடிபாடுகளால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 1ஆம் தேதி முதல் … Read more