தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜார்க்கண்ட்: தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குறுக்குவழி அரசியலில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர். 

ஜார்க்கண்ட் முதல்வரின் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி..! அப்படி என்ன செய்தார்?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையமான தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி; தனது கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் ஹேமந்த் சோரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தியோகர் விமான நிலையம் உள்ளிட்ட 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைந்தார். ஜார்க்கண்ட் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை … Read more

அண்டை நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் உணர்வுபூர்வமானது மட்டுமல்லாமல் சிக்கலானதும் கூட என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று கூறினார். இலங்கை மக்கள் தங்களது வாழ்க்கையின் கடுமையான காலக்கட்டத்தை கடக்க இந்தியா உதவ நினைக்கிறது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். Source link

மும்பை ஆரே கார் ஷெட் விவகாரம் ஆதித்யா மீது வழக்கு பதிய குழந்தைகள் ஆணையம் உத்தரவு: 3 நாளில் பதிலை சமர்ப்பிக்க போலீசுக்கு நோட்டீஸ்

மும்பை: மும்பை ஆரே கார் ஷெட்டுக்கு எதிரான போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆதித்யா தாக்கரே மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மும்பை காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, ஆரே நிலத்தில் கார் ஷெட் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக சுற்றுசூழல் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வர் … Read more

மேல்நோக்கி பாய்ந்த அருவி.. என்ன காரணம் தெரியுமா? IFS அதிகாரியின் அடடே விளக்கம்!

இந்தியாவின் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது என்பதை அண்மை நாட்களாக பெய்து வரும் மழையே உணர்த்திவிடும். அதுவும், மும்பை, கோவா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தொடர் மழையால் சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்கள் வாயிலாக காண முடிகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவின் மும்பை, புனே போன்ற இடங்களில் கொட்டித் தீர்த்து வரும் மழையால் ஒரு புறம் மக்கள் தத்தளித்து வந்தாலும், மறுபுறம் அதனை கொண்டாடித் தீர்க்கவும் செய்கிறார்கள். #WATCH | Gujarat: … Read more

கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக நடத்தப்படும் கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலான தேர்வுகளுக்குரிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 90 பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக இந்தியாவில் 500 இடங்களிலும், வெளிநாடுகளில் 10 இடங்களிலும் கியூட் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் … Read more

ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

டெல்லி: ஜூலை 18-ல் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். டெல்லி சென்றுள்ள சட்டப்பேரவை துணை செயலாளர் ரமேஷ் வாக்குப்பெட்டியை பெற்றுக்கொண்டார். தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது.

திருமணத்தை மீறிய உறவை எதிர்த்த மனைவியை கொன்று மின்கோபுரத்தில் தொங்கவிட்ட கணவன்!

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ருபாலி உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள சைத்பூர் ஜாஹித் கிராமத்தில் உள்ள மின்சார கோபுரத்தில் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை துவக்கினர். உயிரிழந்தவர் உமாதேவி என்பதையும் அவருக்கு திருமணமாகி மகன் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். மகனிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தைதான் அவரை கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்ததாக … Read more

‘தேசிய சின்னத்துக்கு அவமதிப்பு’ – நான்முகச் சிங்க உருவ அமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில், பிரதமர் மோடி திங்கள்கிழமை திறந்து வைத்த பிரம்மாண்ட தேசிய சின்னமானது மாற்றியமைக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை திங்கள்கிழமை (ஜூலை 11) பிரதமர் … Read more

திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவசேனா எம்பிக்களின் ஆலோசனையையும், கோரிக்கையையும் ஏற்று இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார். உத்தவ் தாக்கரேவின் இந்த முடிவால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Source link