மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்

மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் கைதான அவரிடம் கடந்த 10ம் தேதி முதல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மான்கள் தங்கள் மதகுருவான ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாக கருதுவதால், சல்மானும் அவரது தந்தை சலீம் கானும் தனது சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கொலை செய்யும் … Read more

சித்தூரில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றிய என்சிசி மாணவர்கள்-மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சித்தூர் : சித்தூரில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், ஏரியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை என்சிசி மாணவர்கள் அகற்றினர். இந்த பணியை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சித்தூரில் நேற்று சித்தூர் கட்ட மஞ்சு ஏரியை என்சிசி மாணவர்கள் சார்பில் சுத்தம் செய்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையர் அருணா தலைமை தாங்கி, கொடி அசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது கர்ணல் அஜய், லெப்டினன்ட் கர்ணல் ரங்கநாதன், என்சிசி மாஸ்டர் பிரசாத்ரெட்டி உள்பட ஏராளமான … Read more

பைக்ல போறப்போ கூடவா வேலை பாக்க வெக்குறது? – இந்தியாவின் IT நகரத்தின் கொடூரம்?

இந்தியாவின் ஐ.டி. மையம் என்றாலே அது பெங்களுரூதான். அந்த பெங்களூரு நகரத்தின் மேம்பாலம் ஒன்றின் நடுவே பைக்கில் இருந்தபடி, நபர் ஒருவர் லேப்டாப் வைத்து வேலை செய்யும் படம் ஒன்று linkedin தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஹர்ஷ்மீத் சிங் என்பவர் பதிவிட்டுள்ள பதிவு நெட்டிசன்களிடையே கலவையான கருத்துகளை பெற்றிருக்கிறது. ஹர்ஷ்மித்தின் பதிவில், “பெங்களூரு சிறந்ததாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா? இரவு 11 மணிக்கு, பெங்களூரின் முக்கியமான பிசியான மேம்பாலம் ஒன்றில் பைக்கில் இருந்தபடியே ஒருவர் லேப்டாப் … Read more

கனமழை – நிலச்சரிவு: மகாராஷ்டிரா, குஜராத்தில் 146 பேர் பலி!

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 146 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கனமழை கொட்டித் தீரத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரை, தலைநகர் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது. பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிப்பதால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் … Read more

எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை 2 ஆக குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.!

தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில், சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி 3 டயர் பெட்டிகள் ஆறும், ஏசி 2 டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லாத பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. புதிய உத்தரவின்படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டு, ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி 2 டயர் பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லா … Read more

ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் ரயில் பயணம்: ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: தொலைத்துர ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளையும்  குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற இரயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் தொலை தூரம் செல்லும் ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் ரயில்களையே நம்பி உள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலனோர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் மத்தியில் பாஜக அரசுஅமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் மறைமுகமாக அதிகரிக்கப்பட்டு வருவதுடன் சாதரண பேசஞ்சர் … Read more

சுங்கச்சாவடி ஊழியர்களை அடிக்கப் பாய்ந்த WWE வீரர் கிரேட் காளி

WWE வீரர் கிரேட் காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மல்யுத்த விளையாட்டு போட்டியான WWE மூலம் பிரபலமானவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காளி. ‘தி கிரேட் காளி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர், பஞ்சாபில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றை காரில் கடக்க முயன்ற போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் … Read more

குஜராத் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு – இதுவரை 60 பேர் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனழை காரணமாக வால்சட் மாவட்டத்தில் உள்ள அவுரங்கா, அம்பிகா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அம்பிகா ஆற்றின் நடுவே பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 பேரை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். ஜூன் 1ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை, பெருவெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், … Read more

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!!

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. neet.nta.nic.in  என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை… வெப்பம் குறைவதால் மக்கள் மகிழ்ச்சி!

டெல்லியில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். வடமாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தும் காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த மாதமே பருவமழை தொடங்கி விட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தாலும் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இந்நிலையில் … Read more