உதய்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த சிறுமிக்கு கொலை மிரட்டல் – காஷ்மீர் இளைஞர் கைது

உதய்பூரில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த மும்பை சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லாலை கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டு பேர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அதனை வீடியோவும் எடுத்து அவர்கள் வெளியிட்டனர். முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து … Read more

வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. … Read more

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களிடையே மோதல்.. எந்த பேருந்து முதலில் செல்வது என ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது..!

கேரள மாநிலம் கண்ணூரில் இரு தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. மட்டனூர் பகுதிக்கு இரு தனியார் பேருந்துகளும் ஒரே நேரத்தில் எந்த பேருந்து முதலில் செல்வது என்பது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அங்கிருந்த பயணி வீடியோ எடுத்து வெளியிட்டார். இதனையடுத்து இரு தனியார் பேருந்துகளையும் கைப்பற்றிய போலீசார், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் விசாரித்து வருகின்றனர். Source … Read more

குஜராத்தில் கனமழையால் ஆற்றில் சிக்கிய 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: 7 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பலாயிரம் பேர் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். குஜராத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இதனால் டாங் மாவட்டத்தில் பலாயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.  டாப்பி மாவட்டத்தில் உள்ள டோஸ்வாடா அணை நிரம்பி வழிந்து வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் வால்சாத் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் … Read more

கேரளா: 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட கும்பவுருட்டி அருவி

பாதுகாப்பில்லாத காரணத்தால் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கும்பவுருட்டி அருவி சீரமைப்புக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது. கேரள மாநிலம் அச்சன் கோவில் கும்பவுருட்டி அருவியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கீழே உள்ள குழியில் விழுந்து இரண்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்குச் செல்ல தடைவிதித்து பாதை மூடப்பட்டது. இந்நிலையில், ரூ.25 லட்சம் செலவில் பெரிய பள்ளங்கள் முழுமையாக கான்கிரீட்டால் மூடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஞ்சல் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராதா … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் பிரம்மாண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றம் கட்ட கடந்த 2020 டிச. 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், 51 … Read more

குஜராத்தில் வெள்ளத்தால் பல நூறு கிராமங்கள் நீரில் மூழ்கின.. கடந்த ஒன்றரை மாதங்களில் மின்னல் தாக்கி 63 பேர் உயிரிழப்பு..!

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுடன் தொலைபேசியில் பேசிய அமித் ஷா வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.முன்னதாக பிரதமர் மோடியும் குஜராத் முதலமைச்சரிடம் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். தேசியப் பேரிடர் மீட்ப்படை வீரர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.breathe 8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பூர்ணா … Read more

கேரளாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

திருவனந்தபுரம்: கண்ணூர் மாவட்டம் பையனூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

மூவர்ணத்தில் மிளிரும் கேஆர்எஸ் அணை மதகுகள் – சுற்றுலா பயணிகள் பரவசம்

கேஆர்எஸ் அணையின் 15 மதகுகளின் வழியாக நீர் வெளியேற்றம் இரவு நேரத்தில் தேசிய கொடியின் மூவர்ண மின்விளக்குகளால் மிளிரும் காட்சி பார்ப்பவர்களை பரவசமடையச் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள பிரதான நீர் நிலைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நீர் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றம் மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் … Read more

கோவாவில் 2 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் மனு

பனாஜி: கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 40-ல் 11 இடங்களில் காங்கிரஸ் வென்றது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த மைக்கேல் லோபோ எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திகம்பர் காமத் அதிருப்தி அடைந்தார் இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட … Read more