புதிய நாடாளுமன்றக் கட்டிட மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்தார். நாடாளுமன்றக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டரில், “இன்று காலை, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. “நாடாளுமன்றக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். … Read more

6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு மாற முடிவு?

கோவாவில் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரை பதவிநீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 6 பேர் பாஜகவுக்கு மாற திட்டமிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் திகம்பர் காமத்  மற்றும் மைக்கேல் லோபோ ஆகிய எம்.எல்.ஏ.க்களை பதவியை விட்டு நீக்குமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்புதான் லோபோ பாஜகவிலிருந்து விலகி … Read more

ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் 2 வயது தம்பியின் சடலத்தை மடியில் சுமந்த 8 வயது அண்ணன்; ம.பி-யில் மனதை காயப்படுத்திய காட்சி

போபால்: ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் தனது 2 வயது தம்பியின் சடலத்தை 8 வயது அண்ணன் சுமந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பலரது மனதையும் காயப்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் அம்பாவில் உள்ள பட்ஃப்ரா கிராமத்தில் வசிக்கும் புஜாராம் என்பவர், மொரீனா மாவட்ட மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு வயது மகனை சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தான். இறந்த உடலை 30 கிலோமீட்டர் தொலைவில் … Read more

உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நெருக்கடி – 16 சிவசேனா எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி, பெரும்பான்மையான எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாதததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் … Read more

1 தங்கம்,2 வெண்கலப்பதக்கம்.. பின்லாந்தில் தூள் கிளப்பிய 94 வயது இந்தியன் பாட்டி..!

பின்லாந்தின் தாம்பரே நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சேம்பியன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 94 வயது பகவானிதேவி என்ற மூதாட்டி தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் அவர் பந்தய தூரத்தை 24.74 வினாடிகளில் கடந்து வெற்றிப்பெற்றார். மேலும் குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் அவர் இரண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். 94 வயதிலும் உலக போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. Source link

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்.!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. புதுடெல்லி, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் 

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஆஜராக சோனியா காந்தி கூடுதல் அவகாசம் கோரியிருந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது. அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு மீண்டும் சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி ஆஜராகக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அந்த … Read more

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிம்மத்தூண் திறப்பு.!

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் ஆறரை மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தாலான சிம்மத் தூணைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உத்தரப் பிரதேசம் சாரநாத்தில் அசோகரால் நிறுவப்பட்ட நான்கு சிங்கத் தலைகள் கொண்ட சிம்மத் தூண் இந்திய அரசின் சின்னமாக உள்ளது. டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிம்மத் தூணைத் திறந்து வைத்த பிரதமர், கட்டுமானப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். Source link

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும்

டெல்லி: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் நாளை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நாளை காலை 11.30 மணிக்கு நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.