திடீரென பின்நோக்கி நகர்ந்து ஆற்றில் மூழ்கிய ஆம்புலன்ஸ்..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென சாலை விட்டு விலகி ஓடி ஆற்றில் மூழ்கியது. பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ், திடீரென பின்நோக்கி நகர்ந்து கன்பத் பாலம் அருகே உள்ள செனாப் ஆற்றில் விழுந்து மூழ்கியது. இந்த சம்பவத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் கடும் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து ஆற்றில் மூழ்கிய ஆம்புலன்ஸை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.     … Read more

நுபுர் சர்மா மீதான கண்டன விவகாரம்; கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் பதில்

ஐதராபாத்: நுபுர் சர்மாவின் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்ற ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சாதகமாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தாவில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த மம்தா பானர்ஜி, “குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு எங்களிடம் பாஜக ஆலோசித்திருக்க வேண்டும். அவ்வாறு ஆலோசித்திருந்தால், பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவை நாங்கள் ஆதரித்திருப்போம். பழங்குடி சமூகத்தை சேர்ந்த அவருக்கு நிச்சயமாக நாங்கள் ஆதரவு அளித்திருப்போம். பழங்குடியினருக்கு என்றும் ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் இருந்து வருகிறது” எனக் கூறினார். … Read more

‘‘சிவசேனா எம்எல்ஏக்கள் யாருடன் இருக்கிறார்கள்?’’- உத்தவ் தாக்கரே மீது ஏக்நாத் ஷிண்டே கடும் தாக்கு

மும்பை: சிவசேனா எம்எல்ஏக்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பது இன்று தெரிந்து விட்டது என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரேவை கடுமையான தாக்கி பேசினார். மீது சரமாரிக் கேள்வி மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். பாஜக கூட்டணியின் சார்பில் மகாராஷ்டிர … Read more

குஜராத்தில் வெள்ளத்தில் மூழ்கிய 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்..!

குஜராத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி வெளியாகியுள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், மழைநீர் வெளியேறும் குழாய்களுக்குள் தேங்கிய குப்பைகள் அகற்றப்படாததால், நேற்று ஒரு நாள் பெய்த கனமழைக்கே நீரில் மூழ்கின.  Source link

ராகுல் குறித்து போலி வீடியோ; பாஜக எம்பி, டிவி தொகுப்பாளர் மீது வழக்கு: ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி குறித்து போலியான வீடியோ வெளியிட்ட பாஜக எம்பி  ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், டிவி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் ஆகியோர் மீது ேபாலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு எம்பி அலுவலகத்தை சேதப்படுத்தியது குறித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய கருத்தை, உதய்பூரில் நடந்த படுகொலையுடன் தொடர்புபடுத்தி பாஜக எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ேபாலியான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது இந்த செயலுக்கு காங்கிரஸ் சார்பில் … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது: ராஜஸ்தான் எல்லையிலிருந்து பணம் பெற்றதும் அம்பலம்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது. முஸ்லிம் இறைத்தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவிற்கு ஆதரவளித்ததாக உதய்பூரில் கன்னைய்யா லால் டெனி(40) பபடுகொலை செய்யப்பட்டார். இதன் தாக்கமாக பாகிஸ்தானின் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் மாவட்டங்களில் சோதனைகள் நடைபெற்றன. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு இந்தியாவின் எல்லைப்புற பகுதிகளிலிருந்து முக்கியத் தகவல்களை அனுப்பப்படுவதாகத் தெரிந்துள்ளது. ‘ஆப்ரேஷன் சர்ஜாட்’ எனும் பெயரில் ராஜஸ்தானின் சிஐடி பிரிவும், சிறப்புப் படையினரும் … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் : இந்தியா சார்பில் கூடுதலாக ஒரு அணி அறிவிப்பு.. தமிழக வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு..!

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட்டில், ஓபன் பிரிவில் இந்திய அணி சார்பில் மூன்றாவதாக ஒரு அணி சேர்க்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 187 அணிகள் பதிவு செய்துள்ளன. அந்த எண்ணிக்கை ஒற்றைப்படையாக உள்ளதால் போட்டி நடத்த ஏதுவாக இந்தியா சார்பில் சி அணி சேர்க்கப்பட்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர் தேஜஸ்பக்ரே தலைமையிலான இந்த அணியில் கார்த்திக்கேயன், சேதுராமன் என இரு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். Source link

நிலச்சரிவால் அமர்நாத் யாத்திரை பாதிப்பு; ஒரே இரவில் 2 பாலத்தை சீரமைத்த ‘சினார்’ படை: யாத்ரீகர்கள் மகிழ்ச்சி

அமர்நாத்: நிலச்சரிவு ஏற்பட்டதால் 2 பாலங்கள் சேதமான நிலையில், அவற்றை ஒரே இரவில் சினார் படை சீரமைத்து மீண்டும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன்  கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். கொரோனா தொற்றுநோய்  காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த  ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பால்டால் … Read more

`பண்டிகையை கொண்டாடுங்கடே….’ – உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!

இந்தியாவையே கட்டிப்போட்டு வைத்திருக்கிற உணவு அது. புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருவர் ஆர்டர் செய்யும் உணவு அது. ஒரு நிமிடத்துக்கு குறைந்தபட்சம் 90 முதல் 115 வரை ஆர்டராவது பதிவாகும். அட என்னப்பா அது என்கின்றீர்களா? இப்போ இந்த நிமிஷம் சொன்னாகூட உங்களுக்கு பசி எடுக்கும் உணவான பிரியாணி தாங்க அது! கொண்டாட்டமோ துக்கமோ, நள்ளிரவோ அதிகாலையோ, சந்தோஷமா, சோகமோ… பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுவது என்பது இன்றைய இளைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. … Read more