திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனா தொற்றுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நீண்ட நேரத்திற்கு பிறகே பக்தர்கள், சுவாமியை தரிசிக்க முடிகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று இலவச தரிசன வரிசையில் 15 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 88,026 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 50,652 பக்தர்கள் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக சார்பில் அமரீந்தர் சிங் போட்டி?

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நிறுத்தபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜூலை18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிது. இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி … Read more

கொரோனாவுக்கு ஆயுஷ் சிகிச்சை: தகவல்களை வெளியிட்ட மத்திய அரசு

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மையில், நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் ஆயுஷ் அடிப்படையிலான சிகிச்சை பற்றிய தகவல்களின் தொகுப்பை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. நித்தி ஆயோக் துணைத்தலைவர் சுமான் பெரி மற்றும் மத்திய ஆயுஷ் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் கலுபாய் ஆகியோர் இந்தத் தொகுப்பை வெளியிட்டனர். நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் நித்தி ஆயோக், ஆயுஷ் அமைச்சக … Read more

நுபுர் சர்மாவை ஆதரித்து பதிவு வெளியிட்ட டெய்லரை கொன்றவர் பாஜ.வை சேர்ந்தவரா? ஆதாரங்களை வெளியிட்டு காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து வெளியிட்டதற்காக டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள முக்கிய குற்றவாளியான ரியாஸ் அக்தாரி, பாஜ.வை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூகவலைதளங்களில் பதவி போட்டதால், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், கடந்த மாதம் 28ம் தேதி … Read more

24 நாட்களில் 1,600கி.மீ: டெல்லியில் இருந்து கார்கிலுக்கு சைக்கிளில் வீரர்கள் பயணம் 

புதுடெல்லி: இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் இருந்து கார்கில் மலைப்பகுதிக்கு சைக்கிள் பயணம் 2 பெண் அதிகாரிகள் தலைமையில் வீரர்கள் பயணம் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் விதமாக, இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. டெல்லி முதல் டிராஸ் வரையிலான இந்த பயணம் நேற்று தொடங்கியது. ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 20 வீரர்கள் அடங்கிய இந்தக் குழுவிற்கு, ராணுவ மேஜர் ஸ்ரிஷ்டி சர்மா … Read more

'அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது நீதித்துறை' – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

“அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து உள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய – அமெரிக்கர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். அது போல குடியரசு பெற்று, 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். ஆனாலும், அரசியல் சாசனம் ஒவ்வொரு அமைப்புக்கும், ஒவ்வொரு … Read more

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுத்த ஊர்மக்கள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரைப் பிடித்த ஊர்மக்கள் அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரியாசி மாவட்டம் தக்சன் என்னுமிடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளான பைசல் அகமது, தாலிப் உசைன் ஆகியோரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து இரண்டு ஏகே வகைத் துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள், தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. ஊர்மக்களின் துணிச்சலைப் பாராட்டி ஆளுநர் மனோஜ் சின்கா 5 இலட்ச ரூபாயும், டிஜிபி 2 … Read more

மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் தேர்வு.! 164 வாக்குகளை பெற்று வெற்றி

மும்பை: மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் 164 வாக்குகளை பெற்று மராட்டிய சபாநாயகராக ராகுல் நார்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்வி தோல்வியுற்றார். மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. கடந்த புதன்கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் … Read more

பாஜக கூட்டணிக்கு முதல் வெற்றி: மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் வெற்றி: அடுத்தது நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, … Read more

ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் வெற்றி: சபாநாயகராக பாஜக எம்எல்ஏ தேர்வு!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக, பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்வதாக, உத்தவ் தாக்கரே அறிவித்தார். … Read more