அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.!

உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பு தலா 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவடைந்தது. அதேநேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 22.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ஒரு லட்சத்து 74 … Read more

மணிப்பூர் ரயில்வே தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் பலி: மாநில முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு

நோனி: மணிப்பூர் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கடந்த ஜூன் 29ம் தேதி இரவு மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் துபுல் ரயில்வே கட்டுமான தளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 5 லட்சம் … Read more

பலகார கடை உரிமையாளர், ஊழியர்கள் மீது ஆசிட் வீச்சு.. கடனுக்கு உணவு கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர் வெறிச்செயல்..!

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடனுக்கு உணவு கொடுக்க மறுத்த பலகார கடை உரிமையாளர் உள்பட 7 பேர் மீது மர்மநபர் ஆசிட் வீசி தாக்கியுள்ளார். இனிப்பு மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைக்கு சென்ற ஒருவர், கடனுக்கு உணவு கேட்டதாக கூறப்படுகிறது. கடனுக்கு உணவு கொடுக்க முடியாத கடை உரிமையாளர் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த நபர், வீட்டிற்குச் சென்று ஆசிட்டுடன் வந்து தாக்குதல் நடத்தினர் Source link

புகார்களின் அடிப்படையில் ஒரு மாதத்தில் 19 லட்சம் கணக்கு முடக்கம்: வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வாட்ஸ் அப் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கடந்த மே மாதத்தில் 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கைகள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் பெரிய டிஜிட்டல் தளங்கள் (அதாவது 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் கொண்டிருக்க வேண்டும்) வெளியிட வேண்டும்.இதுகுறித்து வாட்ஸ்அப் செய்திதொடர்பாளர் கூறுகையில், ‘சமீபத்திய மாதாந்திர அறிக்கையில் … Read more

சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை – நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்

முகமது நபி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்க காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஞானவாபி மசூதியில் அகழாய்வு செய்யும் விவகாரம் தொடர்பாக ஒரு இந்தி தொலைக்காட்சியில் கடந்த மே மாத இறுதியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கூறினார். இது, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை … Read more

ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி

பெங்களூரு: ஆளில்லாத போர் விமானத்தை இயக்கும் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப்பயிற்சி தளத்தில் நேற்று முதல் ஆளில்லா போர்விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிஆர்டிஓ அதிகாரிகள் செய்திருந்தனர். தன்னிச்சையாக பறந்து இலக்குகளை சரியாக தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பரிசோதனை … Read more

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி ஆலையில் உற்பத்தி தொடக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி ஆலை தனது முழு உற்பத்தியை நேற்று தொடங்கியது. தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் அணையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. 423 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை நவீன தொழில்நுட்பங்களுடன், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அணை நீரின் மேல், மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் ஆவியாவதையும் தடுக்க முடியும். அதாவது ஆண்டுக்கு 32.5 லட்சம் கியூபிக் மீட்டர் … Read more

அசாமில் வெடிபொருட்களுடன் ஊடுருவிய உல்பா தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

டின்சுகியா:அசாமில் வெடிப்பொருட்களுடன் ஊடுருவிய உல்பா தீவிரவாதிகளில் ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உல்பா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே இன்று அதிகாலை திடீர் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் இணைந்து நடத்திய பதிலடி தாக்குதலில் உல்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து டின்சுகியா எஸ்பி டெபோஜித் தியோரி கூறுகையில், ‘வெடிமருந்துகளுடன் 6 உல்பா தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் … Read more

முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி – டெல்லி போலீஸ் தகவல்

அண்மையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுளளதாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் ‘அல்ட் நியூஸ்’ என்ற செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் முகமது ஜுபைர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவானது சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி அவரை டெல்லி போலீஸார் கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். … Read more

பா.ஜ.க.வில் இணைகிறார் கேப்டன் அமரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் (89) பா.ஜ.க.வில் விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், கடந்தாண்டு முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அமரிந்தர் சிங், 8 மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடந்த பஞ்சாப் தேர்தலில் இவரது கட்சி, பாஜக.வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்டது. பாட்டியாலா … Read more