மணிப்பூர் நிலச்சரிவு:15 ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலி; 44 பேர் மாயம்

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 44 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணிப்பூரில் கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். இதுவரை 13 வீரர்களும் பொதுமக்களில் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளன. 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள். விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சற்று … Read more

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு.!

மணிப்பூர் நோனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் சில ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 55 பேர் உடல்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 20 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் முடிய இன்னும் 2 அல்லது 3 நாட்களாகலாம் என்றும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அனுப்பிய தேசியப் பேரிடர் படையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் Source link

இந்தியாவில் சற்றே அதிகரித்த கொரோனா; நேற்று ஒரே நாளில் 17,092 பேருக்கு பாதிப்பு.! மேலும் 29 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819 ஆக உயர்ந்தது. நேற்று இது சற்றே குறைந்தது. இதன்படி நேற்று 17 ஆயிரத்து 70 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை ஏறத்தாழ 1,750 குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக … Read more

கடனை கட்ட முடியவில்லை: கடிதம் எழுதி வைத்துவிட்டு கேரள தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

பழனியில் தனியார் தங்கும் விடுதியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் – சத்தியபாமா தம்பதியர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த தனியார் விடுதி முன்பு கேரள தம்பதியினரின் உறவினர்கள் அழுது கொண்டே வந்தனர். அப்போது விடுதியில் … Read more

ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு ஒரே வரி லட்சியம் நிறைவேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி இந்தியாவின் தொழில் செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது என்றும் ஜிஎஸ்டி மூலம் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 2017 ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்தது. ஜிஎஸ்டி விகிதம் 5%,12%,18%,28% என நான்கு … Read more

தையல்கடைக்காரரைக் கொன்ற நபரின் பைக் நம்பர் 2611.. மும்பைத் தாக்குதலை நினைவுபடுத்தும் எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு கூடுதலாக பணம் தந்தது அம்பலம்..!

உதய்பூரில் தையல்கடைக்காரரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி தமது பைக்கிற்கு 2611 என்ற எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு 5000 ரூபாய் கூடுதலாக பணம் கொடுத்துள்ளார். மும்பைத்தாக்குதல் சம்பவத்தை நினைவுபடுத்தும் இந்த எண் விசாரணையில் புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பைக்கை பறிமுதல் செய்துள்ள போலீசார் உதய்பூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதனிடையே ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க இணைய சேவைகள் 24 மணி நேரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. Source … Read more

புதிதாக தொடங்கிய கட்சியுடன் மாஜி முதல்வர் அமரீந்தர் பாஜ.வில் இணைய முடிவு

சண்டிகர்: காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், தனது கட்சியை பாஜ.வுடன் இணைத்து விட்டு அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங் (89). நவஜோத் சிங் காரணமாக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், இவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் காங்கிரசில் இருந்தும் விலகினார். … Read more

'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' – கன்னையா லாலின் மகன் பேட்டி

”எனது தந்தைக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார்” என கன்னையா லாலின் மகன் கூறியுள்ளார். முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக-வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, கன்னையாவை ராஜஸ்தானைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் அத்தரி, கவுஸ் முகம்மது … Read more

அமித் ஷா வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி உருவாகி இருக்காது – உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாகி இருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு (மகா விகாஸ் அகாடி) கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து நேற்று முன்தினம் புதிய கூட்டணி அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தின் முதல்வராகவும் பாஜக மூத்த … Read more

சதாப்தி விரைவு ரயிலில் 20 ரூபாய் தேநீருக்கு, 50 ரூபாய் சேவை கட்டணம்.. அதிர்ச்சியை வெளிப்படுத்திய ரயில் பயணி..!

சதாப்தி விரைவு ரயிலில் 20 ரூபாய் தேநீருக்கு, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்பட்ட ஐஆர்சிடிசி ரசீதுவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்ற சதாப்தி ரயிலில் பயணித்த நபர் ஒருவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இதனை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், சதாப்தி, ராஜதானி விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே உணவை முன் பதிவு செய்யாமல், ரயிலில் … Read more