ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் அளிப்பவர்களின் அடாவடி வசூல் நடவடிக்கைகளால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில், இத்தகைய மோசடி செயலிகள் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார். கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் தொலைபேசியில் உள்ள விவரங்களையும் பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி கந்துவட்டி போன்று … Read more

உ.பி. அதிர்ச்சி: பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன் கைது

லக்னோ: ‘பப்ஜி‘ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வளரிளம் சிறுவன் ஒருவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பப்ஜி … Read more

நடனக் கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு திருமண விழாவில் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அலிப்பூர்துவாரில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடிய கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடினார்.  

ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் முடியும் நிலையில் ஓரிரு நாளில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு?..வேட்பாளர் தேர்வு குறித்து கட்சிகள் ஆலோசனை

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் வரும் சில வாரங்களில் முடியும் நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஓரிரு நாளில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு ெசய்ய வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலை பொருத்தமட்டில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைத் தவிர, … Read more

பட்டியலினத்தவருடன் காதல்! 17 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!

கர்நாடகாவில் பட்டியனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 17 வயது மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவக் கொலை வழக்கில், கர்நாடகாவின் மைசூருவின் பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ககுண்டி கிராமத்தில் தனது 17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியபட்னாவில் உள்ள கல்லூரியில் இரண்டாம் பியூசி படிக்கும் மாணவியான ஷாலினி பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமத்தில் உள்ள பட்டியனத்தை சேர்ந்த ஒரு இளைஞனை … Read more

மூஸ் வாலா கொலை வழக்கில் 8 பேர் கைது – குடும்பத்தினருக்கு ராகுல் நேரில் ஆறுதல்

சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா கடந்த மே 29–ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது மற்றும் வேவு பார்த்தது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த 8 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளாக அடையாளம் … Read more

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் : பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல்

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த ஆத்திரத்தில், பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். சுரேஷ் – பேபி தம்பதியின் 17 வயதான மகள், இளைஞர் ஒருவரை காதலித்ததற்கு, பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் மீது மாணவி கொடுத்த புகாரை விசாரித்த போலீசார், பெற்றோருடன் செல்ல மாணவி விருப்பம் தெரிவிக்காததால் அவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காப்பகத்தில் இருந்து மாணவியை வீட்டிற்கு அழைத்து … Read more

மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து 100 பேர் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பூக்கோட்டுபாடம் அரசுப் பள்ளி மைதானத்தில் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட 2 அணிகளிலும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டியை காண வழக்கத்தைவிட மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர். … Read more

தாயை கொன்று, தங்கையை அறையில் பூட்டி வைத்த சிறுவன் – நண்பர்களை அழைத்து படம் பார்த்த அவலம்

பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயதே ஆன மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விவகாரத்தில், மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி, 16 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகிய 3 பேர் மட்டும் லக்னோவில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் ராணுவ அதிகாரியின் … Read more

ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுக்கோட்டை இளைஞர் கைதின் பின்னணி தகவல்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரின் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் நீல்காந்த் மணி பூஜாரி. இவர், தலைநகரான லக்னோவில் வசிக்கிறார். மேலும் அங்கு அலிகன்ச் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் தீவிரத் தொண்டராக உள்ளார். இந்நிலையில் நீல்காந்தின் கைப்பேசி எண் வாட்ஸ்-அப்பிற்கு அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து 2 தினங்களுக்கு முன் ஒரு குழும இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் சேரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீல்காந்த் இதனை ஏற்று குழுமத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் … Read more