நாளை 2-வது திருமணம் செய்கிறார் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் இரண்டாவது திருமணம் நாளை நடைபெறவிருக்கிறது. விவாகரத்து பெற்ற நிலையில் பகவத் மான் சிங் முதல் மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், தாய் மற்றும் சகோதரியின் விருப்பத்திற்கு ஏற்ப மருத்துவர் குர்பீத் கவுரை நாளை பகவந்த் நாளை கரம்பிடிக்கிறார். சண்டிகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.   Source link

இமாச்சலத்தில் மேக வெடிப்பு: 4 பேர் வெள்ளத்தில் மாயம்

சிம்லா:  இமாச்சலில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பினால் கனமழை பெய்தது. இதனால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் அடித்து செல்லப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமாகி வருகிறது. கடந்த மாதம் அசாம், திரிபுராவில் பெய்த மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அசாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் பகுதியில் நேற்று காலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு … Read more

நடுக்கடலில் சரக்கு கப்பலில் இருந்து பெறப்பட்ட பேரிடர் எச்சரிக்கை.. உடனடியாக விரைந்து 22 பேரை மீட்ட கடலோர காவல்படை!

குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரை அருகே உள்ள அரபிக்கடல் பகுதியில், சரக்குக் கப்பலில் இருந்து பேரிடர் எச்சரிக்கை பெறப்பட்டதையடுத்து, கடலோர காவல் படையினர் துருவ் ரக ஹெலிகாப்டர்களில் சென்று 22 ஊழியர்களை மீட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் பக்கானிலிருந்து இந்தியாவின் கர்வார் பகுதிக்கு,  6 ஆயிரம் டன் ஆஸ்பால்ட் ((Bitumen )) திரவத்தை ஏற்றி வந்த கப்பலில், நீர் உட்புகுந்து வெள்ளம் ஏற்பட்டதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  Source link

அதிமுக பொதுக்குழு விவகாரம் தனி நீதிபதியிடம் முறையிடலாம்: 23 தீர்மான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி … Read more

பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியை சேர்ந்த பக்வந்த் மான் இருந்து வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் மனைவியை பக்வந்த் மான் விவாகரத்து செய்தார். இந்நிலையில், பக்வந்த் இன்று 2வது திருமணம் செய்து கொள்கிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மியின் பஞ்சாப் தலைமை செய்தி தொடர்பாளர் மால்விந்தர் சிங் காங் கூறுகையில், ‘முதல்வர் பக்வந்த் மான் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். குர்பிரீத் கவுர் என்ற … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தன்னை யாரும் அவமதிக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். சிதம்பரம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாக கூறிய அவர், கோவில் வளாகத்திற்குள் தான் அமர்ந்த போது இங்கே அமரக்கூடாது என்றும் அருகில் உள்ள இடத்தில் ஒருவர் சொன்னதாகவும் கூறியவர் அதனை அவமானமாக நினைக்கவில்லை என்றார். மேலும் சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் ஆனால் பிரச்சனைதான் வருகிறது. அவர்களுடைய பிரச்சனையை … Read more

மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை; இந்திய வானிலை மையம் தகவல்

மும்பை: மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகள், முக்கிய சாலைகள், ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் மிக கனமழை கொட்டும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்த 2 தீவிரவாதிகள்!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹதிகாம் என்ற இடத்தில் இன்று அதிகாலை, பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கியிருந்த இரண்டு நபர்கள் புதிதாக தீவிரவாத அமைப்பில் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததால், அவர்களது பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர் ஒலிப்பெருக்கியில் விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்த இருவரும் சரணடைந்தனர். அந்த வீட்டில் … Read more

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இளையராஜா நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துறைசார் வல்லுநர்களுக்கு அவர்களின் சேவையை கெளரவிக்கும் வகையில் நியமன எம்பி பதவி வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார். அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜா, பி,டி, உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோருக்கு நியமன எம்பியாக அறிவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இளையராஜா … Read more

அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த கேரள அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா

அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த கேரள அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா செய்துள்ளார். சாமானிய மக்களை அதிகபட்சமாக சுரண்டுவதற்கும், சூறையாடுவதற்கும் இந்திய அரசியல் சாசனம் வாய்ப்புகளை வழங்குகிறது என மீன்வளத்துறை அமைச்சர் செரியன் பேசியதாகக் கூறப்படுகிறது. செரியனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.   Source link