“குடும்ப அரசியல் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் கேடு” – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

ஹைதராபாத்: “குடும்ப அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்” என ஹைதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி உட்பட பல … Read more

தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தெலுங்கானா: தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா, ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார். குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என அப்போது தெரிவித்தார்.

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!

அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இரண்டு பர்கர்கள் மற்றும் இரண்டு கிளாஸ் கோககோலாவை அவர்கள் ஆர்டர் செய்துள்ளனர். பரிமாறப்பட்ட கோககோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பல்லி இறந்த நிலையில் குளிர்பானத்தில் மிதந்ததைப் பார்த்து பார்கவ் அதிர்ச்சி அடைந்தார். Here is video … Read more

காங்கிரஸிலிருந்து விலகியது கஷ்டம்தான் – மனம் திறந்த கபில் சிபல்

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் விலகினார். அவர் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் விலகிய பிறகு முதன் முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சி அளித்த நேர்காணலில் “தான் காங்கிரஸில் கட்சியிருந்து விலகிய கஷ்டமான விஷயம்தான். ஆனால், சில நேராமவது நாம் எல்லோரும் அவரவர்களது விஷயம் குறித்தும் யோசிக்க வேண்டும் அல்லவா?” எனக் கூறியுள்ளார். மேலும் கட்சியிருந்து விலகிய ஆசுவாசமாக இருக்கிறது. இனி நாடாளுமன்றத்தில் ஒரு … Read more

கார்த்தி சிதம்பரத்திற்கு இறுகும் பிடி – 'கிலி'யில் ப.சிதம்பரம்!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக, ‘விசா’ வாங்கித் தந்த விவகாரத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சிபிஐ குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 … Read more

முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று ஆஜர்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரானார். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனர்கள் ஒருவருக்கு கூட விசா பெற தான் உதவி செய்யவில்லை என்று தெரிவித்தார்.   Source link

அன்னிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதலிடம்: பசவராஜ் பொம்மை

பெங்களூரு : கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க கடந்த 22-ந்தேதி சென்றார். அவர் கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல நிறுவனங்களின் நிறுவனங்களை கர்நாடகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோஸ் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இந்தியாவில் … Read more

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பட்டப்பகலில் அரசுப் பேருந்து கடத்தல்: ஒருவர் கைது..போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசு பேருந்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து கடத்தப்பட்டது. கடத்தி சென்ற பேருந்து சாலையோரம் நின்ற மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதியது. காளூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி பேருந்தை மீட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக டெல்லியில் உள்ள மைதானங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லியில் தியாகராஜ் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இரவு 9 மணி வரை டெல்லியில்  மைதானங்கள் திறந்திருக்கும் சூழலில், இந்த மைதானத்தில் மாலை 7 மணிக்கே அங்குள்ள விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. டெல்லி வருவாய்த் துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி … Read more

பிரதமர் மோடி ஹைதராபாத் வரும் முன்பே பெங்களூரு புறப்பட்டுச் சென்ற தெலங்கானா முதல்வர்

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வர உள்ளா நிலையில் அவர் வரும் முன்பே சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். இதனால் சந்திரசேகர ராவின் பாஜக மீதான கோபம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர் எஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையே தீவிர அரசியல் மோதல்கள் நடைப்பெற்று வருகின்றன. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாலும், ஹைதராபாத் மாநகராட்சி … Read more