கடந்த 70 ஆண்டுகளில் படிப்படியாக விவசாய நிலங்களில் கார்பன் அளவு 0.3 சதவீதமாக சரிவு: உணவுப்பொருள் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

புதுடெல்லி: கடந்த 70 ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாய நிலங்களில் கார்பன் அளவு ஒரு சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக சரிந்து குறைந்துள்ளதாக தெரிய  வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் தேசிய மானாவாரி (விவசாயத்துக்கு மழையை நம்பி இருப்பது) விளைநிலப் பகுதி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் தல்வாய் அளித்த பேட்டியில் கூறியதாவது: மண்ணில் உள்ள கார்பன் அளவுதான் அதன் இயற்கை வளத்தில் முக்கிய அம்சமாகும். இதுதான் மண்ணுக்கு நீரை தேக்கி வைக்கும் திறன், கட்டமைப்பு … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வெளிநாட்டு விமானங்கள் சேவையை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது இந்தியா.!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து வெளிநாட்டு விமானங்கள் சேவையை இந்தியா இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 40 நாடுகளில் இருந்து 66 பன்னாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்தியாவிற்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை போன்றவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. எட்டு மாதங்கள் வரையில் நீடித்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி … Read more

சர்வதேச விமான சேவை இன்று மீண்டும் துவக்கம் வெளிநாடு செல்வோருக்கு விரைவில் பூஸ்டர் தடுப்பூசி: ஒன்றிய அரசு முடிவு

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு விரைவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. … Read more

இஸ்ரோ ஆய்வு குழு விளக்கம் ஜிசாட்-1 செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது ஏன்?

புதுடெல்லி: வால்வு கசிவால், திரவ ஹைட்ரஜன் டேங்கில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக ஜிசாட்-1 செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோவின் ஆய்வுக்குழு அறிக்கை தந்துள்ளது. நாட்டின் இயற்கை வளங்கள், எல்லை நிலப்பரப்புகள், வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கண்டறிய உதவும் வகையில், ஜிசாட்-1 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 307வது நொடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோளை … Read more

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து 31-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர்களுடன் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் தேசிய அளவிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 31-ம் தேதி எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் … Read more

தூத்துக்குடி உட்பட 21 இடங்களில் சைனிக் பள்ளி: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தேசியக் கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு தரமான கல்வியுடன், ஆயுதப் படையில் சேர்வதற்கான பயிற்சி வழங்கும் வகையில் நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவான இத்திட்டத்தில் முதல்கட்டமாக 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தனியார் துறையுடன் இணைந்து 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் … Read more

8 பேர் எரித்து கொல்லப்பட்ட மேற்கு வங்க கிராமத்தில் சிபிஐ குழு விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சம்பவம் நடந்த கிராமத்திற்கு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டம், போக்டூய் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூர் ஷேக், கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த கிராமத்தில் நடந்த வன்முறையில் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் … Read more

ஒடிசா உள்ளாட்சி தேர்தல் – பிஜு ஜனதா தளம் அபார வெற்றி

புவனேஷ்வர்: ஒடிசாவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள், கார்ப்பரேட்டர்கள், தலைவர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு வரம்பை தேர்தல் ஆணையம் உயர்த்தியது. இந்நிலையில், ஒடிசாவில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தமுள்ள 108 இடங்களில் 95 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.  மேலும், பா.ஜ.க. 6 இடத்திலும், காங்கிரஸ் 4 இடத்திலும், சுயேட்சை 3 … Read more

உத்தரகாண்டில் முதல் பெண் சபாநாயகராக ரிது கந்தூரி தேர்வு

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் முதல் பெண் சபாநாயகராக முன்னாள் முதல்வரின் மகள் ரிது கந்தூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோத்வார் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிது காந்தூரி, முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரியின் மகள். இந்நிலையில், இம்மாநில சட்டப்பேரவையில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் விலகியது. இதனை தொடர்ந்து போட்டியின்றி ரிது கந்தூரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் … Read more

எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் காங். 3 கட்ட போராட்டம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து வரும் 31ம் தேதி முதல் 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: உபி உள்பட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடந்ததால் வாக்குகளை பெற 137 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், காஸ் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தாமல் வைத்திருந்தது. ஆனால், … Read more