கேரளாவில் அதிவேக ரயில் பாதை சர்வே பணி நிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை 532 கி.மீ. தூர அதிவேக ரயில் பாதைக்கான சர்வே பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல பகுதிகளில் சர்வே கல் பதிக்க வந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.நேற்றும் எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சர்வே பணிகளை மேற்கொள்ள வந்த … Read more

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை மீட்க உயர்மட்ட அளவில் முயற்சி: மக்களவையில் அமைச்சர் உறுதி

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த பல எம்பி.க்கள் இந்த பிரச்னையை எழுப்பினர்.  இதற்கு  வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளிக்கையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் 170 … Read more

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?.. திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக அவர் எழுப்பிய கேள்விகளின் விவரங்கள் பின் வருமாறு: * உக்ரைன் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக சேர்ந்த … Read more

பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 220 புதிய விமானம்

ஐதராபாத்: விங்க்ஸ் இந்தியா -2022’ விமான கண்காட்சி, ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று முடிந்தது. இதில்நேற்று பங்கேற்று பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. விமான பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டில் ஒரு நாளைக்கு 4.10 லட்சமாக உயரும். இதனால், விமானங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்த நிலையில், விமானங்களின் எண்ணிக்கை … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ், திமுக எம்பி.க்கள் மக்களவையில் வெளிநடப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஐந்து மாநில  சட்டபேரவைகளுக்கு தேர்தல் நடந்ததால் கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மக்களவையில் இப்பிரச்னையை நேற்று எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய், ‘கொரோனாவால் கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்த மக்கள் இப்போதுதான் அதில் … Read more

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 21-ந்தேதி பாதிப்பு 1,549 ஆக இருந்தது. மறுநாள் 1,581, நேற்று முன்தினம் 1,778, நேற்று 1,938 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் … Read more

தனிநபர் வருமானம்: சிக்கிம் முதலிடம்

புதுடெல்லி: தனிநபர் வருமானத்தில் சிக்கிம், கோவாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, டெல்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சமர்பித்தார். இந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமானத்தில் சிக்கிம், கோவா முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்துள்ளன. டெல்லியின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 16.81 சதவீதம் அதிகரித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை காட்டிலும் 3 … Read more

நீதிமன்ற விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மக்களவையில் நடப்புக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியது: “உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றத்தின் மின்னணு கமிட்டி குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தவிர உச்ச … Read more

கவுகாத்தி விமான நிலையத்தில் 80 வயது பெண்ணின் ஆடையை களைந்து சோதனை – விசாரணை நடத்த உத்தரவு

கவுகாத்தி: நாகாலாந்தை சேர்ந்தவர் மொகலோ கிகோன் (வயது80). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தனது பேத்தியுடன் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்திற்கு சென்றார். அவர் வீல் சேரில் அமர்ந்து சென்றார்.அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.இந்த சோதனையின் போது மொகலோ கிகோன் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தம் எழந்தது. கடந்த மாதம் அவர் இடுப்பில் அறுவை சிசிச்சை … Read more

தேர்வை சந்திப்பது எப்படி?.. மாணவர்களுடன் 1ம் தேதி பிரதமர் கலந்துரையாடல்

புதுடெல்லி: தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 1ம் தேதி கலந்துரையாட உள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பாக ஏற்படும் மன பயம், அழுத்தத்தில் இருந்து விடுபடுவது தொடர்பாக, பிரதமர் மோடி அவர்களுடன் `பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் ஆண்டுதோறும் பேசி வருகிறார். இது, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு … Read more