ஆம் ஆத்மி சார்பில் மனுதாக்கல் மாநிலங்களவை தேர்தல் ஹர்பஜன் சிங் போட்டி

புதுடெல்லி: மாநிலங்களவையில் 13 எம்பிக்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் மாதம் முடிவடைகின்றது. பஞ்சாப் 5 எம்பிக்களின் பதவிகாலம் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைகின்றது, கேரளா 3, அசாம் 2, இமாச்சலப்பிரதேசம், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் காலியாக உள்ள தலா ஒரு எம்பி பதவி காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனைமுன்னிட்டு வருகின்ற 31ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் … Read more

நாடாளுமன்ற துளிகள்

* சுங்கச்சாவடிகளில் கட்டண கொள்ளைமக்களவையில் 2022-23ம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கேரளாவை சேர்ந்த சிபிஐ (எம்) எம்பி ஏ.எம்.ஆரிப் பேசுகையில், ‘‘சுங்கச்சாவடி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்களை கொள்ளையடித்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கட்டுமான செலவை மீட்டெடுத்த பிறகு, சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. … Read more

உக்ரைன் போரால் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை தடுக்க ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை … Read more

வெளிநாடுகளில் கொரோனா அதிகரிப்பு அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு கடந்த 16ம் தேதி முதல் 60 வயது மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு தகுதியானர்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 9 மாதங்கள் முதல் 39 வாரங்கள் … Read more

நில மோசடிப் புகாரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் உட்பட 3 பேர் கைது

நிலம் விற்பனையில் தொழிலதிபரிடம் 97 இலட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி உள்ளிட்ட மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுனில் கோபி கோவை நவக்கரையில் குடியிருந்து வருகிறார். மயில்சாமி என்பவர் தனக்குச் சொந்தமான நாலேகால் ஏக்கர் நிலத்தை சுனில் கோபிக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றிய சுனில்கோபி அதை விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து … Read more

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர்வது குறித்து அரசு விரைவில் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: ‘உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்திய மாணவர்களை பயணிகள் விமானம், விமானப்படை மூலம் ஒன்றிய அரசு மீட்டது.இதற்கிடையே, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் … Read more

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்.!

டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா நோக்கி சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. QR579 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியில் இருந்து புகை வெளியாவது கண்டறியப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பயணிகள் தோஹா சென்றடைய மாற்று … Read more

உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் குறித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவுகளின் கீழ் செய்யப்படுகிறது, இதில்  எந்த சாதி அல்லது நபர்களுக்கு இடஒதுக்கீடும்  வழங்கவில்லை. எனவே சாதி வாரியான தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. உயர் நீதிமன்றங்களில் 700 நீதிபதிகள் பணிபுரிந்து … Read more

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலுக்கு அஞ்சலி: முதல்வர் பசவராஜ் பங்கேற்பு

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் நேற்று பெங்களூரு கொண்டுவரப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரின் போது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில், உணவு வாங்கி வர சென்ற கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ரானிபென்னூர் தாலுகா, செலகெரே கிராமத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா பலியாயானார். ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல் உக்ரைனிலிருந்து கர்நாடகா கொண்டு … Read more

பஞ்சாபில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 5 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு

பஞ்சாபில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 5 பேரை வேட்பாளர்களாக ஆம் ஆத்மிக் கட்சி அறிவித்துள்ளது. பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு 5 பேரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மார்ச் 31ஆம் நாள் நடைபெற உள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மிக் கட்சி கைப்பற்றியது. இதனால் மாநிலங்களவையில் 5 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சதா, டெல்லி … Read more