பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அடுத்த மாதம் 2ம்  தேதி  இந்தியா வருகிறார். இந்தியா- இஸ்ரேல் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வர உள்ளார். 4 நாள் பயணத்தின் போது  பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில்  ஒப்பந்தங்கள் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட நவீனின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைப்பு.!

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்துக்கு ராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. உடலை அவருடைய பெற்றோரும் ராணுவ உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர். நவீனின் உடலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். நவீனின் உடலை இந்தியா கொண்டு வர உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்நவீனின் உடல் சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தின் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள இருப்பதாக … Read more

பீகாரில் கலப்பட மது குடித்த 14 பேர் உயிரிழப்பு – பலருக்கு உடல் நிலை பாதிப்பு

பங்கா: பீகாரின் பங்கா, பாகல்பூர் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது போலி மதுபானம் அருந்தியவர்களில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் நகரில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாஹிப் கஞ்ச் பகுதியில் நான்கு பேர் உயிரிழந்தனர்.  மாதேபுராவில், கலப்பட மது குடித்ததாகக் கூறப்படும் மூன்று பேர் உயிரிழந்தனர். … Read more

பாதுகாப்பு பணியில் முன்னாள் வீரர்களை சேர்க்க வேண்டாம்: ஒன்றிய அரசுக்கு சிஐஎஸ்எப் கடிதம்

புதுடெல்லி:  துணை ராணுவ படைகளில் ஒன்றான ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளது. பாதுகாப்பு இல்லாத இதர பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 2 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து கொள்ளும்படி. தொழில் பாதுகாப்பு படைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு அனுமதி அளித்தது.  இந்த பணிகளில் சேர்க்கப்படும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை … Read more

அரியானாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கையெறி வெடிகுண்டுகள்.!

அரியானாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 கையெறி குண்டுகள் உள்பட 4 வெடிகுண்டுகளை போலீசார் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர். அம்பாலா, சண்டகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஒன்றரை கிலோ வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழிகப்பட்ட நிலையில், திட்டமிட்டு வெடிகுண்டுகள் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி செய்தனரா என மத்திய புலனாய்வு மற்றும் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.     Source link

லாலுவுடன் மீண்டும் ைகோர்த்தார் சரத் யாதவ் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் லோக்தந்திரிக் கட்சி இணைப்பு

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சரத் யாதவின் லோக்தந்திரிக் ஜனதா தள கட்சி நேற்று  இணைந்தது. பாஜ.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சரத் யாதவ் வேண்டுகோள் விடுத்தார். மூத்த சோசலிஸ்ட் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ், லோக்தளம், ஜனதா, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். ஐக்கிய தனதாதள கட்சியின் மூத்த தலைவராக இருந்த சரத் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால்  2017ம் … Read more

மக்கள் பணத்தை திருடினாலும் விடமாட்டேன் வேலை செய்யலன்னா அமைச்சர் பதவி காலி: பஞ்சாப்பில் கெஜ்ரிவால் எச்சரிக்கை

சண்டிகர்: ‘மக்களின் பணத்தை திருடினால் பொறுக்க மாட்டேன். அமைச்சர்கள் வேலை செய்யவில்லை என்றால், பதவியை விட்டு நீக்கப்படுவார்கள்,’ என்று பஞ்சாப்பில் கெஜ்ரிவால் எச்சரித்து உள்ளார். பஞ்சாப்பில் நடந்து முடிந்து சட்டப்பேரவை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. முதல்வராக பக்வந்த் மான் பதவியேற்றார். தொடர்ந்து, 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி … Read more

உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் உடல் பெங்களூரு வந்தது- கர்நாடகா முதலமைச்சர் அஞ்சலி

பெங்களூரு: உக்ரைனின் கார்கிவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்ற மருத்துவ படிப்பு மாணவர் உயிரிழந்தார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.  நவீன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.  மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நவீன் … Read more

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அசாதிகா அமித் மகோற்சவம் என்ற பெயரில் ஓராண்டுக்கு, ஏப்ரல் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20ம் தேதி  வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 75வது சுதந்திர தினம் நிறைவு பெறக்கூடிய நாளில் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை நடத்துவது … Read more

மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு

புதுடெல்லி: மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ₹25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், 5 மாநில தேர்தல் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரை தாண்டியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. … Read more