உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் உடல் பெங்களூரு வந்தது- கர்நாடகா முதலமைச்சர் அஞ்சலி

பெங்களூரு: உக்ரைனின் கார்கிவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்ற மருத்துவ படிப்பு மாணவர் உயிரிழந்தார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.  நவீன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.  மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நவீன் … Read more

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அசாதிகா அமித் மகோற்சவம் என்ற பெயரில் ஓராண்டுக்கு, ஏப்ரல் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20ம் தேதி  வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 75வது சுதந்திர தினம் நிறைவு பெறக்கூடிய நாளில் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை நடத்துவது … Read more

மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு

புதுடெல்லி: மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ₹25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், 5 மாநில தேர்தல் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரை தாண்டியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. … Read more

கேரளாவில் மலப்புரம் அருகே கால்பந்து மைதானத்தில் கேலரி சரிந்து விபத்து: 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயம்

திருவனந்தபுரம் : கேரளாவில் கால்பந்து போட்டியின்போது கேலரி  சரிந்து விழுந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரள  மாநிலம், மலப்புரம் அருகே உள்ள வண்டூர் பூங்கோடு மைதானத்தில், செவன்ஸ்  என்று அழைக்கப்படும் 7 வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி  நடைபெற்றது. போட்டியை  காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மைதானத்தில் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோழிக்கோடு,  நெல்லிக்குத்து ஆகிய அணிகளுக்கு … Read more

கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைகிறது – தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் 2அவது டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி குறைக்கப்பட உள்ளது. சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டின் 2 டோஸ்களுக்கான கால இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக உள்ளன. இந்நிலையில், அந்த இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. 12 வார கால இடைவெளியில் கோவிஷீல்டு செலுத்தப்படும் போதும், 8 வாரங்களில் செலுத்தப்படும் போதும் உருவாகும் நோய் எதிர்ப்பு தன்மையில் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மோடி அரசு மீட்கும் – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் உறுதி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மகாராஜா குலாப் சிங் சிலையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது: 1987 ஆண்டு நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மோசடி செய்ததார். இது இறுதியில் பயங்கரவாதம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் தூண்டுதலாக மாறியது. மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிப்பது உள்பட மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகள் … Read more

முகக்கவசம் அணியும் விதியை தளர்த்தலாம் அடுத்து வரும் அலைகள் இந்தியாவை பாதிக்காது: நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: `இனி அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, முகக் கவசம் அணிவதற்கான விதிகளை தளர்த்தலாம்,’ என்று எய்ம்ஸ் நோய் தொற்றுயியல் மருத்துவர் தெரிவித்தார். மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 46 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 676 பேர் பாதித்துள்ளனர். மேலும், 60 லட்சத்து 75 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப நாட்களாக தென் கொரியா, சீனா … Read more

சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் நிதின் கட்கரி

சர்க்கரை உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பது சர்க்கரைத் தொழிலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் சர்க்கரைத் தொழில் பற்றிய மாநாட்டில் பேசிய அவர், எரியாற்றல் துறையை நோக்கி வேளாண்மையைப் பன்முகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார். விவசாயிகள் உணவு வழங்குவது மட்டுமின்றி எரியாற்றல் வழங்குவோராகவும் மாற வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்தார். எத்தனால், மெத்தனால், பயோடீசல், ஹைட்ரஜன், மின்சாரம் ஆகியவற்றில்தான் எதிர்காலம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா இரு தரப்பு உச்சி மாநாடு: காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று காணொலி மூலம் நடைபெறுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியும்,  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவாதிக்க உள்ளனர். வர்த்தகம், கனிமங்கள், மற்றும் கல்வி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவின் பல்வேறு துறைகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  … Read more

மின்சார வாகனம், பேட்டரி தயாரிப்பில் இந்தியாவில் சுசுகி நிறுவனம் முதலீடு

மின்சார வாகனம் மற்றும் பேட்டரி தயாரிப்புக்காக இந்தியாவில்  2026-ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரத்து 445 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குஜராத்தில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும், மேலும் … Read more