உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார். உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற வளர்ச்​சி, விளை​யாட்டு மற்​றும் திறன்​மேம்​பாடு … Read more

ம.பி. சரணாலயத்தில் சபாரி சென்ற ராகுல் காந்தி

போபால்: மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக பச்​மரி சரணால​யத்தை அவர் பார்​வை​யிட்​டார். திறந்த ஜீப்​பில் சரணால​யம் முழு​வதும் சபாரி சென்றார். இதுகுறித்து பச்​மரி சரணாலய துணை இயக்​குநர் சஞ்​சீவ் சர்மா கூறும்​போது, “ராகுல் காந்தி பட்​டாம்​பூச்சி பூங்​கா​வில் சிறிது நேரம் தங்​கி​யிருந்​தார். ஜீப்​பில் சென்​ற​போது சில வகை மான்​களை அவர் பார்த்​தார். அவற்​றின் விவரங்​களை கேட்​டறிந்​தார். … Read more

பாநாசம் பாணியில் கொலை.. பிணத்தை மறைக்க கொலையாளி செய்த காரியம்

Pune Man Killed Wife He Inspired By Drishyam Movie: கமல்ஹாசன் நடித்த பாபநாசம் பட பாணியில் புனேவில் நடந்த கொலை சம்பவம் அதிரவைத்துள்ளது.   

ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500

டோக்கியோ: உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்​ளது. தெற்​காசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு நாட்​டுக்​கும் வெவ்​வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யம் உள்​ளது. என்​றாலும் இந்த நாடு​களிடையே பொது​வான விஷய​மாக அரிசி உள்​ளது. ஒவ்​வொரு நாடும் தனித்​து​வ​மான அரிசி வகைகளை உற்​பத்தி செய்​கின்​றன. இவை பெரும்​பாலும் எல்​லோ​ராலும் வாங்​கக் கூடிய விலை​யிலேயே கிடைக்​கின்​றன. என்​றாலும் ஜப்​பானின் கின்​மேமை பிரீமி​யம் அரிசி ஒரு ஆடம்பர … Read more

அத்வானி பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் துணை பிரதமரு​மான எல்​.கே.அத்​வானி நேற்று தனது 98-வது பிறந்​த​நாளை கொண்​டாடி​னார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: எல்​.கே. அத்​வானிக்கு பிறந்​த​ நாள் வாழ்த்​துக்​கள். உயர்ந்த தொலைநோக்கு மற்​றும் அறி​வுத்​திற​னால் ஆசீர்​வ​திக்​கப்​பட்ட ஓர் அரசி​யல்​வா​தி​யான அத்​வானி​யின் வாழ்க்கை நாட்​டின் முன்​னேற்​றத்தை வலுப்​படுத்த அர்ப்​பணிக்​கப்​பட்​டுள்​ளது. எப்​போதும் தன்​னலமற்ற கடமை உணர்​வு, உறு​தி​யான கொள்​கைகளுக்​கு சொந்​தக்​காரர் அத்​வானி. அவரது … Read more

சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் எம்​பி, எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள், அமைச்​சர்​கள், முதல்​வர், ஆளுநர் உள்​ளிட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள், அரசு ஊழியர்​கள் ஆண்​டு​தோறும் தங்​களின் சொத்து விவரங்​களை ஊழல் கண்​காணிப்​பக​மான‌ லோக் ஆயுக்​தா​வில் தாக்​கல் செய்ய வேண்​டும் என சட்ட விதி​கள் 22, 22(1) வலி​யுறுத்​துகின்​றன‌. நடப்​பாண்​டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்​குள் சொத்து விவரங்​களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்​கள் ஆன பிறகும் பெரும்​பாலான பிர​தி​நி​தி​கள் சொத்து விவரங்​களை தாக்​கல் செய்​ய​வில்லை. இதுகுறித்து லோக் … Read more

வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி

பச்மாரி: ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு என்றும் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளன. … Read more

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் நாளை சட்டப்பேரவை தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது. பிஹாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு இரண்டு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதன்​படி கடந்த 6-ம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 65.08 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. இரண்​டாம் கட்​ட​மாக நாளை 122 தொகு​தி​களில் தேர்​தல் நடக்​கிறது. இந்த தொகு​தி​களில் … Read more

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார். பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக ஆம் ஆத்மி கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனவர் ஹர்​மீத் சிங் பதன்​மஜ்​ரா. இவர் மீது ஜிர்​காபூரைச் சேர்ந்த பெண் ஒரு​வர் பாலியல் குற்​றச்​சாட்டை அளித்​தார். அதில், ஹர்​மீத் முன்பே திரு​மண​மானதை மறைத்து தன்னை திரு​மணம் செய்து ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், பாலியல் ரீதி​யாக​வும், ஆபாச​மான … Read more

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: ​நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர். குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​திகளைதீவிர​வாத தடுப்​புப் படை​யினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்​தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: போலீஸ் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில், ஏடிஎஸ் இன்​ஸ்​பெக்​டர் நிகில் பிரம்​பத், சப் இன்​ஸ்​பெக்​டர் ஏ.ஆர்​.சவுத்ரி ஆகியோர் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டனர். … Read more