முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு
பெங்களூரு: கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக கர்நாடகா மீது திட்டமிட்டு எதிர்மறை பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் சில நிறுவனங்கள் கர்நாடகாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. பன்னாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கர்நாடகாவில் தொழில் … Read more