“நீதித்துறை ஊழல் மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” – தலைமை நீதிபதி கவாய் கவலை

புதுடெல்லி: நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்துள்ளார். நீதித்துறைக்கு இருக்கும் சட்ட அதிகாரம் மற்றும் பொது நம்பிக்கையைப் பேணுதல் என்ற தலைப்பில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் உரை நிகழ்த்திய பி.ஆர்.கவாய், “நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஒட்டுமொத்த அமைப்பின் … Read more

அதிகரிக்கும் கொரோனா.. 44 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை இருக்கா?

Corona death count: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மத்தியப் பிரதேசம்: வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி, இருவர் காயம்

ஜபுவா: மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றப்பட்ட லாரி, வேன் மீது கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஜபுவா மாவட்டத்தின் மேக்நகர் தாலுகாவுக்கு உட்பட்ட சஞ்சேலி எனும் இடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாவ்புரா என்ற பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், ஷிவ்கர் மஹுதா என்ற தங்கள் கிராமத்துக்கு வேனில் வீடு … Read more

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கிரண் ரிஜிஜு 

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத … Read more

அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல்: மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு சம்மன்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது அரை நிரந்தர கட்டமைப்புகளை கட்டுவதற்காக … Read more

உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி கோரிய அங்கன்வாடி சிறுவன்: நிறைவேற்றிய கேரள அரசு!

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இனி அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பிரியாணி தரணும்’ … கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் மழலை மொழியில் சிறுவன் ஒருவன், ‘பிரியாணி தரணும்’ எனச் சொல்வார். அதற்கு அவரது அம்மா, ‘எங்கே’ எனக் கேட்பர். “அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக … Read more

சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம்

புதுடெல்லி: இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் … Read more

பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்ன நடக்கும்? – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம்

குவாஹாட்டி: பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும் என்னும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவப் படைகள் அழித்தன. மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை … Read more

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் மோடியிடம் 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அரிய நிகழ்வாக 16 எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து வலியுறுத்தி உள்ளன. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் … Read more

கரோனா தொற்றுக்கு 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நேற்று காலை 8 மணி வரையி​லான நில​வரப்​படி கரோனா வைரஸ் தொற்​றுக்கு சிகிச்சை பெறு​வோர் எண்​ணிக்கை 4,026 ஆக அதி​கரித்​துள்​ள​தாக மத்​திய சுகா​தார அமைச்​சகத்​தின் புள்ளி விவரம் கூறுகிறது. நேற்று காலை 8 மணி​யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்​தில் புதி​தாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்​யப்​பட்​டது. அத்​துடன் கேரளா, தமிழ்​நாடு மற்​றும் மேற்கு வங்​கத்​தில் தலா ஒரு​வர் மகா​ராஷ்டி​ரா​வில் 2 பேர் என மொத்​தம் 5 பேர் உயி​ரிழந்​தனர். இதன்​மூலம் இது​வரை … Read more