ஹெட்போனுடன் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 2 சிறுவர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் பல்தி கிராமத்துக்கு அருகில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அகமதாபாத் – ஹவுரா விரைவு ரயில் மோதியதில் 16-17 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பிரஷாந்த், ஹர்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்து குறித்து ரயிலின் லோகோ பைலட் அருகில் உள்ள பல்தி ரயில் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறுவர்கள் இவரும் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு தண்டவாளத்தில் … Read more

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது. இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில் உரிய விசா அனு​மதி இல்​லாமல் சட்​ட​விரோத​மான வழி​முறை​யில் குடியேறிய ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது. இதில் 16 பேர் ஹரி​யா​னா​வின் கர்​னல் மாவட்​டத்தை சேர்ந்​தவர்​கள். கைதாலைச் சேர்ந்த 15 பேர், அம்​பாலா 5, … Read more

நூதன முறையில் லஞ்ச வசூல்: ராஜஸ்தான் உயர் அதிகாரியின் மனைவிக்கு ரூ.37.54 லட்சம் சம்பளம் வழங்கிய 2 நிறுவனம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை இணை இயக்​குனர், லஞ்​சத்தை தனது மனைவி மூலம் சம்​பள​மாக பெற்​றுள்​ளது லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை​யில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் இணை இயக்​குன​ராக பணி​யாற்​று​பவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி பூனம் திக்​ஷித். ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் ராஜஸ்​தான் அரசின் டெண்​டர்​களை பெற்​று​வந்​துள்​ளன. இந்த நிறு​வனங்​களுக்கு பிரத்​யு​மான திக்​ஷித்​தான் டெண்​டர்​களை வழங்​கி​யுள்​ளார். இதற்கு பிர​திபல​னாக தனது மனை​வியை இந்த 2 நிறு​வனங்​களி​லும் … Read more

தீவிரப் புயலாக வலுவடைந்தது ‘மோந்தா’ – ஆந்திராவில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோந்தா’ புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிரமான புயலாக வலுவடைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மோந்தா புயல் தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு முதல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (அக்டோபர் … Read more

டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்!

புதுடெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி மீதான ஆசிட் வீச்சு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக மாணவியின் தந்தை தன் மீதான பாலியல் வழக்கை திசை திருப்பும் விதமாக இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. வடக்கு டெல்லியின் முகுந்த்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் அசோக் விஹாரில் உள்ள லட்சுமிபாய் கல்லூரி அருகே ஜிதேந்தர் என்பவர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக … Read more

SIR-க்கு கேரளா எதிர்ப்பு | தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு எதிரானது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு … Read more

பிஹாரில் பெண்களுக்கு ரூ.2500, அரசு வேலை, 200 யூனிட் இலவச மின்சாரம்: மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை அம்சங்கள்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக எதிர்க்கட்சியான மகா கூட்டணியின் கூட்டு தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 25 அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பிஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி மகா கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கெரா, விஐபி கட்சியின் தலைவரும், துணை முதல்வர் வேட்பாளருமான … Read more

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் குழு நியமன தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உச்ச … Read more

மிரட்டும் ‘மோந்தா’ புயல்: ஆந்திரா, ஒடிசாவில் ரெட் அலர்ட் – ரயில்கள், விமானங்கள் ரத்து

விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் தீவிரமாக உருவான ‘மோந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒடிசா மற்றும் ஆந்திர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ரயில்களும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: மோந்தா புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தெற்கு ஒடிசாவை சேர்ந்த மல்கன்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரங்பூர், கலஹந்தி … Read more

‘சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது' – முதல்வர் மாற்றம் குறித்து டி.கே.சிவகுமார் பதில்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது என்று கூறினார். கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “காங்கிரஸ் உயர் தலைமையின் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். உயர் தலைமை முடிவு செய்தால், எனது பதவிக் காலத்தை முழுவதுமாக முடிப்பேன்.” என்றார். சித்தராமையாவின் இந்த கருத்து குறித்து … Read more